• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஒரே நாளில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 41 பேர் கைது : ரூ.31,120 பறிமுதல்

January 16, 2023 தண்டோரா குழு

கோவை புறநகர் போலீசாருக்கு பல்வேறு இடங்களில் மெகா சூதாட்டம் நடைப்பெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

கோமங்கலம் போலீசார் கடிமேடு பகுதியில் சோதனை செய்தனர். அங்கு 8 பேர் ரூ.21, 970 வைத்து சூதாட்டத்தில் ஈடுப்பட்டது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.
பொங்காலியூர் பகுதியில் சூதாட்டத்தில் ஈடுப்பட்ட 4 பேரை கைது செய்து ரூ.2300-யை பறிமுதல் செய்தனர்.

ஆனைமலையில் 6 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.2350-யை பறிமுதல் செய்தனர்.இதேபோன்று பேரூர் மத்திப்பாளையத்தில் 4 பேர், நெகமம் அடுத்த செங்குட்டைப்பாயைத்தில் 2 பேர், மதுக்கரை வலுக்குப்பாறையில் 4 பேர், பெரிய நாயக்கன்பாளையத்தில் 8 பேர் ஆகிய 18 பேரை சேவல் சூதாட்டத்தில் ஈடுப்பட்டதாக போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.7,800 பறிமுதல் செய்யப்பட்டது.

பொங்கல் விடுமுறையான நேற்று ஒரே நாளில் மெகா சூதாட்டத்தில் ஈடுப்பட்ட 41 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.31,120-யை பறிமுதல் செய்தனர்.

மேலும் படிக்க