ஷார்ஜாவில் இருந்து கோவை வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட சுமார் 3.5 கிலோ தங்கம் பிடிபட்டது.
ஷார்ஜாவில் இருந்து கோவைக்கு இன்று வந்த ஏர் அரேபியா விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அந்த விமானத்தில் கோவை வந்து இறங்கிய பயணிகளை சோதனை செய்தனர். அப்போது அந்த பயணிகளில் 6 பேர் மீது சந்தேகம் எழுந்துள்ளது.
அவர்களிடம் நடத்திய சோதனையில் அவர்களின் பேன்ட் பாக்கெட், உடைகள் மற்றும் மலக்குடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 3.5 கிலோ எடையுள்ள சுமார் ரூ. 2.05 கோடி மதிப்பிலான தங்கம் கைப்பற்றப்பட்டது. இதுகுறித்து கடலூரை சேர்ந்த மணிகண்டன் (32), திருச்சியை சேர்ந்த இப்ராஹிம் (20) ஆகிய இரண்டு பயணிகள் கைது செய்யப்பட்டனர்.
கோவையில் ராயல்ஓக் ஃபர்னிச்சரின் இரண்டாவது புதிய புதிய ஸ்டோர் திறப்பு !
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், ஊர் கேப்ஸ் இணைந்து தமிழ்நாட்டில் 500 மின்சார மூன்று சக்கர வாகனங்களை களமிறங்குகின்றன!
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்