பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கோவை – திண்டுக்கல் இடையே பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை,பழநி வழித்தடத்தில் ஜனவரி 13 முதல் 18 ஆம் தேதி வரை சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
கோவையில் இருந்து ஜனவரி 13ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை தினமும் காலை 9.20 மணிக்கு புறப்படும் கோவை } } திண்டுக்கல் முன்பதிவில்லா சிறப்பு விரைவு ரயில்( எண்: 06077) அன்று பிற்பகல் 1 மணிக்கு திண்டுக்கல்லைச் சென்றடையும். இதேபோல், திண்டுக்கல்லில் இருந்து ஜனவரி 13ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை தினமும் பிற்பகல் 2 மணிக்கு புறப்படும் திண்டுக்கல் -கோவை முன்பதிவில்லா சிறப்பு விரைவு ரயில்( எண்: 06078) அன்று மாலை 5.30 மணிக்கு கோவையைச் சென்றடையும். இந்த ரயிலானது, கோவை, போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, கோமங்கலம், உடுமலைப்பேட்டை, மைவாடி சாலை, மடத்துக்குளம், புஷ்பத்தூர், பழநி, சத்திரப்பட்டி, ஒட்டன்சத்திரம், அக்கரைப்பட்டி உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகைக்கு கோவையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என பயணிகள் நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், கோவை – திண்டுக்கல் சிறப்பு ரயில் அறிவிப்பு ரயில் பயணிகள் தரப்பில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு