• Download mobile app
02 May 2024, ThursdayEdition - 3004
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வேளாண் பட்டப்படிப்பு படித்த இளைஞர்களுக்கு நிதி உதவி வேளாண்மை இணை இயக்குநர் தகவல்

January 10, 2023 தண்டோரா குழு

கோவை வேளாண்மை இணை இயக்குநர் முத்துலெட்சுமி கூறியிருப்பதாவது:

கோவை மாவட்டத்தில் வேளாண்மை, தோட்டகலை, வேளாண்மை பொறியியல் பட்டப்படிப்பு படித்த வேலையில்லாத இளைஞர்களை தொழில்முனைவோராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வேளாண் சார்ந்த தொழில் தொடங்குவதற்கு பட்டதாரி ஒருவருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் நிதி உதவி மானியமாக வழங்கப்படும்.பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் அல்லது வேளாண்மை உட்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ் பயனடைந்த தகுதியுடைய பயனாளிகளுக்கு மட்டும் 25 சதவீத மானியமாக அல்லது அதிகபட்ச நிதி உதவியாக ரூ.1 லட்சம் மூலதன மானியமாக வழங்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அரசு வங்கி மற்றும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து கடன் பெறலாம். குடும்பத்திற்கு ஒரு வேளாண் பட்டதாரி இந்த திட்டத்தில் பயன்பெற பயனாளிகள் 21 முதல் 40 வயதுடைய வேளாண்மை, தோட்டகலை,வேளாண்மை பொறியியல் பிரிவில் குறைந்த பட்சம் இளநிலையில் பட்டப்படிப்ப முடித்தவராகவும் அரசு மற்றும் தனியார் நிறுவனத்தில் பணிபுரியாதவராகவும் இருக்க வேண்டும். கணினித் திறன் பெற்ற மற்றும் குடும்பத்திற்கு ஒரு வேளாண் பட்டதாரி மட்டுமே நிதியுதவி பெற தகுதியுடைவர்.

10 மற்றும் 12ம் வகுப்பு சான்றிதழ், பட்டப்படிப்புக்கான சான்றிதழ், ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, தொடங்க உத்தேசித்துள்ள வேளாண் தொழில் தொடர்பான விரினான திட்ட அறிக்கை, வங்கி கணக்கு புத்தகம் வங்கியிடம் இருந்து பெறப்பட்ட கடன் ஒப்புதல் ஆவணம் போன்றவைகள் தேவைப்படும் ஆவணங்கள் ஆகும். இத்திட்டம் குறித்த கூடுதல் விபரங்களுக்கு வேளாண் இணை இயக்குநர் அலுவலகம் மற்றும் அனைத்து வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க