• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஸ்ரீசக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் வேளாண் திருவிழா 2023

January 7, 2023 தண்டோரா குழு

திரு செங்கோட கவுண்டர் கல்வி அறக்கட்டளை மற்றும் கோவை எல்என்டி பைபாஸ் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியும் இணைந்து வழங்கும் ஐந்தாம் ஆண்டு வேளாண் திருவிழா 2023 ஜனவரி மாதம் 7 மற்றும் 8 தேதிகளில் நடைபெறுகிறது.

இரண்டு நாட்கள் பிரம்மாண்ட விழாவாக நிகழவிருக்கும் இந்த வேளாண் திருவிழா ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் வளாகத்தில் ஜனவரி 7ஆம் தேதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் விழா துவங்கியது.சிறப்பு விருந்தினராக கோவை ராயல் கேர் மருத்துவமனையின் தலைவர் கே. மாதேஸ்வரன் கலந்து கொண்டு துவங்கிவைத்தார்.மேலும் கல்லூரியின் செயலாளர் தீபன் தங்கவேலு ,துணை செயலாளர் சீலன் தங்கவேலு ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

நாட்டின மாடு,காளை,ஆடு,நாய்,மற்றும் சேவல் கண்காட்சி:

காங்கேயம் கால்நடை அழகு போட்டிகள் ஜனவரி 7ஆம் தேதி சனிக்கிழமை காலை 9.30 க்கு துவங்கியது. பசுமாடு, காளைகள் மற்றும் எருமை மாடு ஆகியவை வயதுக்கு ஏற்ப நான்கு வகைகளாக பிரித்து எடுக்கப்பட்டு ஒவ்வொரு வகைக்கும் தனித்தனியாக போட்டிகள் நடைபெற்றன.மேலும் காளை வகைகளில் மயிலை காளை, செவலை காளை,காரிக்காளை என்று பல்வேறு வகையான காளைகளுக்கும் தனித்தனியே போட்டி நடைபெற்றது. மேலும் நாட்டின ஆடு, நாய்,சேவல், குதிரை ஆகியவையின் கண்காட்சியும் நடைபெற்றது.

சிறப்பாக பங்கெடுத்துக்கொண்ட கால்நடைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட கால்நடைகள் ஆர்வமுடன் பங்கெடுத்துக் கொண்டன. கண்காட்சியைப் பார்வையிட விவசாயிகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.

மேலும் திருவிழாவின் முக்கிய அம்சமாக விவசாயத்தைமேம்படச் செய்யும் வகையில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய அறிவியல் தொழில்நுட்பமென்பொருள்கள், கருவிகள், வங்கிக் கடன்கள்குறித்து வேளாண் வர்த்தக கண்காட்சியில் இடம் பெற்றன.

ரேக்ளா போட்டிகள்:

வேளாண் திருவிழாவின் முக்கியமான அம்சம் ரேக்ளா போட்டிகள் ஜனவரி 8 ஞாயிற்றுக்கிழமை காலை 6:30 மணி முதல் மாலை 2:00 மணி வரை நடைபெறுகிறது. ரேக்ளா போட்டியின் முன்பதிவு ஜனவரி 8ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணிக்கு தொடங்குகிறது.இந்த ரேக்ளா போட்டியில் 300க்கும் அதிகமான ரேக்ளா வண்டிகள் கலந்து கொள்கின்றன. 100 மீட்டர் மற்றும்200 மீட்டர் என தனித்தனியாக போட்டிகள் நடைபெறும். போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக 8 கிராம் தங்க நாணயம் உட்பட பல்வேறு பரிசுகள்வழங்கும் நிகழ்வு, நிறைவு விழா அன்று மாலை 4:30 மணிக்கு நடைபெறுகிறது.

கலை நிகழ்ச்சிகள்:

தமிழரின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள்கிராமிய கலைஞர்களால் நிகழ்த்தப்படுகின்றன. நிறைவு விழாவின் சிறப்பு விருந்தினராக ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் தலைவர் டாக்டர் எஸ் தங்கவேலு ,செயலாளர் தீபன்தங்கவேலு ,துணை செயலாளர் சீலன் தங்கவேலு , ஆகியோர் கலந்துகொண்டு ரேக்ளா போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்குகின்றனர்.

மேலும் படிக்க