• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

18 பதக்கங்களை குவித்த கோவை மாணவர்கள்

January 6, 2023 தண்டோரா குழு

தூத்துக்குடியில் அண்மையில் நடைபெற்ற தனிநபர் மற்றும் ஜோடிக்கான டாட் (TAT-Taekwondo Association Tamilnadu-Affiliated to India Taekwondo) 2-வது மாநில அளவிலான டேக்வாண் டோ போட்டியில், கோவை சம விளையாட்டு அகாடமி மாணவர்கள் 18 பதக்கங்களை வென்றனர்.

இப்போட்டியில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த, 800-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.4.5 வயது முதல் 17 வயது வரையிலான சம விளையாட்டு மாணவர்கள் பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற இப்போட்டியில் பங்கேற்று கோவை மற்றும் தமிழகத்திற்கு விருதுகளை குவித்து மாநிலத்தின் சார்பில் தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.

மாணவர்கள் 12 தங்கம், 3 வெள்ளி மற்றும் 3 வெண்கலம் என மொத்தம் 18 பதக்கங்களை வென்றுள்ளனர். இந்த மாணவர்கள் கடந்த மாதம் பள்ளி பதாகைகளின் கீழ் ஆர்டிஎஸ் மற்றும் பிடிஎஸ் (RDS & BDS) மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்று தங்கள் பள்ளிகளுக்கு பதக்கங்களை கொண்டு வந்தனர். இந்தப் போட்டிகளில் பங்கேற்க கடந்த ஒரு வருடமாக பயிற்சி பெற்று வந்தனர்.

பயிற்சியாளர்கள் பிரதீப் குமார், மதன் குமார் ஆகியோர் இவர்களுக்கு பயிற்சி அளித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க