January 6, 2023
தண்டோரா குழு
கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் தீவிரமாக அகற்றப்பட்டு வருகிறது. சாலையோர கடைகள், அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர்கள், மாநகராட்சி இடத்தில் ஷெட்டுகள் அமைத்தல் போன்றவைகளை அதிகாரிகள் தீவிரமாக அகற்றி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், 20 வது வார்டுக்குட்பட்ட பிபிசி காலனில் உள்ள பொது ஒதுக்கீட்டு இடத்தில் இருந்த இரண்டு ஷெட்டுகள் இன்று மாநகராட்சி அதிகாரிகளால் இடித்து அகற்றப்பட்டது . மீட்கப்பட்ட இடத்தின் அளவு 22 செண்ட் ஆகும். மீட்கப்பட்ட இடத்தின் மதிப்பு 3.40 கோடி ரூபாய் ஆகும்.