• Download mobile app
31 Jan 2026, SaturdayEdition - 3643
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தாயுடன் காலை சிற்றுண்டி சாப்பிட்டு மகிழ்ந்த பிரதமர்

January 10, 2017 தண்டோரா குழு

அரசுமுறைப் பயணமாக குஜராத் மாநிலம் சென்ற பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை (ஜனவரி 1௦) யோகாசனம் பயிற்சியைத் துறந்து, தனது தாயுடன் காலை உணவை உண்டு மகிழ்ந்தார்.

“ஆற்றல் மிக்க குஜராத்” என்னும் சர்வதேச மாநாட்டில் கலந்துகொள்ள நான்கு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை (ஜனவரி 9) குஜராத் சென்றார்.

காலையில் யோகாசனம் செய்வதை முறையாகக் கொண்ட அவர், அதிகாலை தனது தாயாரைச் சந்தித்து அவருடன் சிற்றுண்டி மற்றும் தேநீர் அருந்தினார். இந்த மகிழ்ச்சி அனுபவத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். அதில் “இன்று(செவ்வாய்க்கிழமை) யோகாசனத்தை துறந்து, என்னுடைய தாயாரைச் சந்தித்தேன். காலையில் அவரோடு உணவு உண்டு, நேரத்தைச் செலவிட்டேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் பா.ஜ.க. மக்களவை கூட்ட சொற்பொழிவில் கலந்து கொள்ள குஜராத் வந்த பிரதமர் தனது தாயை 2௦ நிமிடங்கள் சந்தித்தார். மேலும் தனது 66வது பிறந்த நாளைக் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தனது தாய் ஹீரா பென்னுடன் கொண்டாடி மகிழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க