• Download mobile app
16 Nov 2025, SundayEdition - 3567
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை விமான நிலையத்தில் இருந்து சார்ஜாவிற்கு சென்ற விமானத்தில் மோதிய கழுகுகள்

January 2, 2023 தண்டோரா குழு

கோவை விமான நிலையத்தில் இருந்து 22 விமானங்கள் தினந்தோறும் இயக்கப்படுகிறது. இதில் சர்வதேச அளவில் காலை ஏர் அரேபியா, மாலை சிங்கப்பூர் விமானம் என விமானங்கள் இயக்கப்படுகிறது.

இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் ஏர் அரேபியா விமானம் கோவை விமான நிலையத்தில் இருந்து சார்ஜாவிற்க்கு 164 பயணிகளுடன் காலை 7மணிக்கு புறப்பட்டது.
அப்போது விமானம் புறப்பட்டு ஓடுபாதையில் சென்று கொண்டிருந்தபோது இரண்டு கழுகுகள் விமானத்தின் இடது பக்க எஞ்சின் மீது மோதியது. இதில் இரண்டு கழுகுகளில் ஒன்று என்ஜின் பிளேடில் அடிபட்டு இறந்தது.

இதனையடுத்து விமானம் நிறுத்தப்பட்டது. இதில் இருந்த பயணிகள் அனைவரையும் இறக்கிவிடப்பட்டனர்.மேலும் விமானத்தின் சேதங்கள் குறித்து பொறியாளர்கள் ஆய்வு செய்து வருவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேலும் சுமார் 4மணி நேரமாக விமானம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

மேலும் படிக்க