• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பி.பி.ஜி.தொழில்நுட்ப கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

January 1, 2023 தண்டோரா குழு

ஒவ்வொரு கல்லூரிக்கும் முன்னால் மாணவர்கள் ஆணிவேர்கள் போன்றவர்கள் என்றும் தற்போது கல்லூரிகளில் பயின்று வரும் மாணவ, மாணவிகளுக்கு முன்னால் மாணவர்களின் சாதனைகள் ஊக்கம் அளிப்பதாக இருக்கும் என பி.பி.ஜி.கல்வி குழுமங்களின் தலைவர் டாக்டர் தங்கவேலு தெரிவித்துள்ளார்.

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள பி.பி.ஜி.தொழில்நுட்ப கல்லூரியில் முன்னால் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து ஏழாவது ஆண்டாக நடைபெறும் இதில்,2008 ஆம் ஆண்டு முதல் படித்த பல்வேறு துறை சார்ந்த மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.தொடர்ந்து நிகழ்ச்சியில் கல்லூரியில் படிக்கும் போது பெற்ற அனுபவங்களையும்,தற்போது பல்வேறு துறைகளில் நல்ல நிலைகளில் பணியாற்றி வரும் அனுபவங்களையும் மாணவ, மாணவிகள் பகிர்ந்து கொண்டனர்.

முன்னதாக பி.பி.ஜி.கல்வி குழுமங்களின் தலைவர் டாக்டர் தங்கவேலு பேசுகையில், ஒவ்வொரு கல்லூரிக்கும் முன்னால் மாணவர்கள் ஆணிவேர்கள் போன்றவர்கள் என்றும் தற்போது கல்லூரிகளில் பயின்று வரும் மாணவ, மாணவிகளுக்கு முன்னால் மாணவர்களின் அனுபவங்கள் மற்றும் சாதனைகள் ஊக்கம் அளிப்பதாக இருக்கும் என தெரிவித்தார். நிகழ்ச்சியில் பி.பி.ஜி. கல்விக் குழுமத்தின் தாளாளர் சாந்தி தங்கவேலு,துணை தலைவர் அக்‌ஷய், கல்லூரி முதல்வர் முனைவர் சத்தியசீலன்,கல்லூரி மேராசிரியர்கள், ஊழியர்கள் மாணவ,மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க