December 31, 2022
தண்டோரா குழு
கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்குட்பட்ட மணியகாரன்பாளையம், கக்கன்வீதியில் அடிப்படை வசதிகள் குறித்து மேயர் கல்பனா ஆனந்தகுமார் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அப்பகுதியில் மழைநீர் வடிகால் கட்ட உரிய திட்ட மதிப்பீடு தயாரிக்கவும், சமுதாயக்கூடம் பராமரிப்பு பணி மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட பொறியாளர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.
அதனைத்தொடர்ந்து மணியகாரன்பாளையம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுமான பணியினை பார்வையிட்டு பணிகளை விரைவாகவும், தரமாகவும் செய்து முடித்து விரைவில் மாணவர் பயன்பாட்டிற்கு கொண்டுவர பொறியாளருக்கு அறிவுறுத்தினார்பின்னர் பள்ளியில் உள்ள கழிப்பறைகள் மற்றும் மணியகாரம்பாளையம் அம்மா உணவகம் அருகில் உள்ள கழிப்பறைகள் சுகாதாரமாக உள்ளதா? என ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வுகளின் போது வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல், உதவி கமிஷனர் மோகனசுந்தரி, உதவி செயற்பொறியாளர் செந்தில்பாஸ்கர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.