• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உயிரிழந்த ராணுவ வீரர் மைக்கேல் சுவாமியின் உடல் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்

December 31, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த தேவி நகர் பகுதியை சேர்ந்தவர் மைக்கேல் சுவாமி இவர் இந்திய ராணுவத்தின் கூர்கா ரைபிள் படை பிரிவில் சுபேதாராகப் பணியாற்றி வருகிறார்.இவருக்கு அனிதா ஜோஷி என்ற மனைவியும் 9″ம் வகுப்பு படிக்கும் மோனிகா என்ற மகளும் உள்ளனர்.

இவர் தற்பொழுது சிக்கிம் மாநில எல்லையில் சுமார் 17 ஆயிரம் அடி உயரத்தில் பனி சூழ்ந்த சிகரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்.இந்நிலையில் அதிகபட்ச குளிர் தாக்கம் காரணமாக ராணுவ வீரர் மைக்கேல் சுவாமிக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.இதையடுத்து அவருக்கு உடனடியாக அங்கு இருந்த ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.

இதை அடுத்து உயிரிழந்த ராணுவ வீரர் மைக்கேல் சுவாமியின் உடல் அவரது சொந்த ஊரான மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேவி நகரில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்துவரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.இதை அடுத்து அரசியல் பிரமுகர்கள் வருவாய்துறை அதிகாரிகள் ராணுவ அதிகாரிகள் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து உயிரிழந்த ராணுவ வீரருக்கு அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் மைக்கேல் சுவாமியின் உடல் மேட்டுப்பாளையம் உதகை சாலையில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.பணியில் இருந்து ஓய்வு பெறுவதர்க்கு இராணுவ வீரர் மைக்கேல் சாமிக்கு இன்னும் ஆறு மாத காலங்களே இருந்த நிலையில் கடந்த மாதம் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்து குடும்பத்துடன் இருந்துவிட்டு கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் மீண்டும் பணிக்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க