• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாநகராட்சியின் ரூ. 3 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு

December 31, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சியில் உள்ள பல்வேறு வார்டுகளில் மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள் சில தனி நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு அதில் தற்காலிக செட் அமைப்பது போன்ற பல்வேறு செயல்களை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கோவை மாநகராட்சி 90 வது வார்டு கோவை புதூர் சரவணா நகர் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான முப்பது செண்ட் இடத்தை சில தனி நபர்கள் அபகரித்து அதனை விற்பனை செய்யவும் முயன்றுள்ளனர். இந்நிலையில்,அதே பகுதியில் வசிக்கும் சமூக ஆர்வலர் சீனிவாசன் என்பவர் இது குறித்து புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் மாநகராட்சி கமிஷன்அர் பிரதாப் உத்தரவின் படி மாநகராட்சி தெற்கு மண்டல அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டு மாநகராட்சி க்கு சொந்தமான மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை மீட்டனர்.

இதனை தொடர்ந்து மீட்கப்பட்ட இடத்தில் இது மாநகராட்சிக்கு சொந்தமான இடம் என அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது. இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், நீண்ட நாட்களாக தனிநபர் ஆக்ரமிப்பில் இருந்த இந்த இடத்தை தற்போது மாநகராட்சி மீட்டுள்ளதால் இந்த பகுதியில் பூங்கா அமைத்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் என தெரிவித்தனர்.

மேலும் படிக்க