• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக இரண்டாவது நாளாக NIA அதிகாரிகள் விசாரணை

December 27, 2022 தண்டோரா குழு

கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக இரண்டாவது நாளாக NIA அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவையில் அக்டோபர் 23″ஆம் தேதி உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக 9″பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இவர்களில் பெரோஸ் கான்,உமர் பாரூக், முஹம்மது அசாருதீன், அப்சர் கான் மற்றும் பெரோஸ் ஆகிய ஐந்து பேரை மட்டும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நேற்று முன்தினம் கோவை காவலர் பயிற்சி மைதானம் அழைத்து வந்தனர்.

நேற்று தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அந்த ஐந்து பேரையும் உக்கடம் ஜி.எம்.நகர் பகுதிக்கு நேரில் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்று அன்பு நகர், புல்லுக்காடு ஆகிய பகுதிகளில் ஐந்து பேரை நேரில் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் 21ம் தேதியில் இருந்து 29″ம் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க