• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சி.எஸ்.ஐ நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழா

December 26, 2022 தண்டோரா குழு

கோவை வெரைட்டி ஹால் சாலை பகுதியில் உள்ள சி.எஸ்.ஐ நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பள்ளிக்குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

கோவை வெரைட்டி ஹால் சாலையில் உள்ள சி.எஸ்.ஐ.நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.முன்னதாக நடைபெற்ற துவக்க விழாவில்,பள்ளியின் தாளாளர் ப்ரவீன் விமல் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இதில், தென்னிந்திய திருச்சபை கோயமுத்தூர் செயலாளர் பிரின்ஸ் கால்வின் தலைமை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக காவல்துறை உதவி ஆணையர் வின்சென்ட் கலந்து கொண்டு விழாவை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், ஆயரம்மா ஐடா பிரின்ஸ் கால்வின்,தென்னிந்திய திருச்சபை கோயமுத்தூர் செயற்குழு உறுப்பினர் அறிவழகன்,கிறிஸ்டியன் பெடல் சி.எஸ்.ஐ. பிரைமரி பள்ளியின் தாளாளர் மனோகரன், செயலாளர் தேவராஜ் சாமுவேல், சி.எஸ்.ஐ. ஆண்கள் மேல்நலை பள்ளி முதல்வர் மேரி மெட்டில்டா,நர்சரி பிரைமரி பள்ளி தலைமையாசிரியை கிரேஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.விழாவில் பள்ளி குழந்தைகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் ஆடல் பாடல் என அசத்தினர்.இதனை பெற்றோர்கள் உட்பட பலர் கண்டு ரசித்தனர்.

மேலும் படிக்க