• Download mobile app
08 Apr 2026, WednesdayEdition - 3710
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தி அத்யாயனா சர்வதேச பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற கிரீடா விளையாட்டு தின போட்டி

December 26, 2022 தண்டோரா குழு

கோவை பொம்மனாம்பாளையம் தி அத்யாயனா சர்வதேச பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற கிரீடா விளையாட்டு தின போட்டியில் மழலையர்களின் கலை நிகழ்ச்சிகள் அசத்தலாக நடைபெற்றது.

கோவையை அடுத்த பொம்மனம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் அத்யாயனா சர்வதேச பப்ளிக் பள்ளியில் மழலையர் விளையாட்டு தினம் நடைபெற்றது. கிரீடா எனும் தலைப்பில் நடைபெற்ற விளையாட்டு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழாவை பள்ளியின் இயக்குனர் ஆனந்த் கிருஷ்ணன் மற்றும் இணை இயக்குனர் சௌமியா ஆனந்த் கிருஷ்ணன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

முன்னதாக விளையாட்டு தின நிகழ்வை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில், மழலையர்களின் பிரத்யேக விளையாட்டுகளான, ஃபேஸ் மீ ரைட்,கிளிப் த டி சர்ட்,டிராக் த பால்,ஹனிபி ரேஸ் உள்ளிட்ட மழலையருக்கான 20 க்கும் மேற்பட்ட பிரத்யேக போட்டிகள் நடைபெற்றன. போட்டியில் வெற்றி பெற்ற சிறுவர்,சிறுமிகளுக்கு கிரீடா விழாவில் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

விழாவில் தொடர்ந்து நடைபெற்ற மழலை மாணவ,மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.

மேலும் படிக்க