• Download mobile app
30 Apr 2024, TuesdayEdition - 3002
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மாணவர்களுக்கு ஒரு லட்சம் படுக்கை வசதியை 2024க்குள் ஏற்படுத்த திட்டம் !

December 24, 2022 தண்டோரா குழு

இந்தியாவின் மாபெரும் இருபாலருக்குமான தங்கும் வசதியை அளித்து வரும் ஜோலா ஸ்டேய்ஸ், இன்வெஸ்ட் கார்ப், நெக்ஸஸ், வெஞ்சர் பார்ட்னர்ஸ், ஐடிஎப்சி ஆல்டர்நேட்டிவ்ஸ், மிர்ரே அசட்ஸ் ஆகியவற்றின் பின்னணியுடன், மாணவர்களுக்கு தங்கும் வசதியை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது.

கோவை நேரு குழுமம் மற்றும் பிற நிறுவனங்களின் மாணவர்களுக்கான தங்கும் வசதியை ஏற்படுத்தியுள்ளது. ஜோலோவுடன் இணைந்த பிறகு, நேரு குழுமத்தின் தங்கும் வசதியை 55 சதம் உயர்த்தியுள்ளது இந்த ஆண்டு வருவாய் 8 சதம் உயர்ந்துள்ளது.

இங்கு மாணவர்களுக்கான தங்குமும் வசதியில் மிகவும் வசதியான அறைகள், விளையாட்டு வசதிகள், ஜிம், நவீன கிச்சன் வசதி, சிறப்பான பராமரிப்பு, 24 மணி நேரம் 7 நாட்கள் பாதுகாப்பு மற்றும் பிற வசதிகள் உள்ளன. ஜோலோஸ்காலர் 7 பல்கலைக்கழகங்கள், வணிககல்வி நிறுவனங்களுடன் இணைந்து, பெங்களுரு, சென்னை, கோட்டா, டில்லி என்சிஆர், மும்பை, கோயம்புத்தூர், புனோ, குருக்ரம், நொய்டா மற்றும் ஐதராபாத் உள்ளிட்ட 9 நகரங்களில் வசதியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது 12000 படுக்கை வசதிளுடன் தங்கும் வசதியை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் 20,000 படுக்கை வசதிகளை ஏற்படுத்தவுள்ளது.

இந்த நிகழ்வின்போது, இதன் இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி நிகில் சிக்ரி பேசியதாவது:

ஒரே ஆண்டில் 55 சதம் வளர்ச்சியை எட்டியுள்ளோம். இது எதிர்காலத்திலும் மாணவர்களுக்கான தங்கும் வசதியை ஏற்படுத்த எங்களுக்கு நம்பிக்கையை அளித்துள்ளது. மாணவர்களது வசதியையும், விடுதிக்கான அனுபவத்தையும் பெற தொடர்ந்து வசதிகளையும், பங்குதாரர்களுடன் இணைந்து ஏற்படு்த்தி வருகிறோம். அடுத்து ஆண்டு இறுதிக்குள், 20 ஆயிரம் படுக்கை வசதிகளை ஏற்படுத்தி விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. ஜோலோ ஸ்காலர், மாணவர்களின் அனுபவத்தை தொழில்நுட்ப ரீதியாகவும், சமுதாய ரீதியாவும் விரிவாக்கம் செய்து வருகிறது,” என்றார்.

நேரு மேலாண்மை கல்லூரியின் முதல்வர் மோசஸ் டேனியல் பேசுகையில்,

“ஜோலோ, எங்களது ஹாஸ்டல்களை நடத்த தந்திரமிக்க திட்டமிட்டங்களை கொண்டுள்ளது. அனைத்தும் சரி என அறிந்த பிறகே அவர்களுடன் இணைந்தோம். மாணவர்களின் தங்கும் வசதி மேலாண்மைக்காக மட்டுமின்றி, முழுமையான பொறுப்பேற்கும் அனுபவத்திற்காகவும் இணைந்தோம். மாணவர்களுக்கு தேவையான சலவை வசதிகள், பொழுதுபோக்கு அம்சங்களை உருவாக்கவும், நிகழ்வுகளுக்கும், நடவடிக்கைகளுகளை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மாணவர்களின் நடத்தையில் நேர்மறையான எண்ணங்கள் உருவாகியுள்ளன. ஜேலோ 100 சதவீத தங்கும் வசதிகளையும் நிரப்பியுள்ளது என்பதில் பெருமை கொள்கிறோம்,” என்றார்.

ஜோலோ, 98 மில்லியன் டாலர் நிதியை நான்கு சுற்றுக்களில் திரட்டியுள்ளது. தற்போதைய அவர்களது நிதியானது, 2020 ஜூலை மாதத்தில் சி சுற்றில் பெறப்பட்டுள்ளது. துபாய், இந்தோனேஷியா, தாய்லாந்து உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் மாணவர்கள் தங்குமிடங்களை உருவாக்க திட்டமிட்டு வருகிறது.

மேலும் படிக்க