• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் 5 ஏக்கர் நிலத்தில் மியா வாக்கி என்னும் அடர் வனக்காடுகள்

December 23, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டு பகுதிகளில் இருந்து வெள்ளலூர் குப்பைக்கிடங்கிற்கு தினமும் 800 டன் முதல் 900 டன் வரை குப்பைகள் சேகரித்து அனுப்பப்படுகின்றன.இதில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்காமல் குப்பைகளை மக்கள் அனுப்புவதால் மீதேன் எரிவாயு உருவாகி வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தீ விபத்தும் அடிக்கடி ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

இதனை தடுக்கும் விதமாகவும், வெள்ளலூர் குப்பைக்கிடங்கிற்கு கொண்டு வரும் குப்பைகளை குறைக்கவும், மாநகராட்சிக்குட்பட்ட கவுண்டம்பாளையம், ஒண்டிப்புதூர், உக்கடம் உள்ளிட்ட பகுதிகளில் 69 மைக்ரோ கம்போஸ்டிங் சென்டர் என்ற நுண்ணுயிர் மையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டன. அதன் பின் நிர்வாக காரணங்களுக்காக 32 நுண்ணுயிர் மையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டன. இதற்கான பணிகள் துவங்கி 2 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

இதில் தற்போது சுமார் 12 நுண்ணுயிர் மையங்கள் பணிகள் நிறைவடைந்து நல்ல நிலையில் இயங்கி வருகிறது. இதனிடையே கோவை வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் கடந்த 10 ஆண்டுகளாக சுமார் 66 ஏக்கரில் பல லட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளது. இதனை பயோமைனிங் முறையில் அழித்திட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் மூலம் தினமும் சுமார் 40 டன் வரை குப்பைகள் அழிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,

‘‘ கோவை வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் பயோ மைனிங் மூலம் தேங்கி உள்ள குப்பைகளை அழிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் சுமார் 20 ஏக்கர் வரை தேக்கி வைத்திருந்த குப்பைகள் அழிக்கப்பட்டுள்ளன. இதில் 5 ஏக்கர் நிலத்தில் மியா வாக்கி என்னும் அடர் வனக்காடுகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன’’ என்றார்.

மேலும் படிக்க