• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வெகு விமர்சையாக நடைபெற்ற கீதாஞ்சலி பப்ளிக் பள்ளியின் 10வது ஆண்டு விழா !

December 23, 2022 தண்டோரா குழு

கோவை அவினாசி சாலை கொடிசியா அருகே உள்ள கீதாஞ்சலி பப்ளிக் பள்ளியின் 10வது ஆண்டு விழா இன்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

கீதாஞ்சலி பப்ளிக் பள்ளியின் தலைவர் அழகிரிசாமி தலைமையுரையாற்றினார். பள்ளியின் முதல்வர் கவிதா ஆண்டறிக்கையை வாசித்தார்.இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக குமரகுரு கல்வி குழுமங்களின் தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், எந்த பள்ளிக்கு சிறந்த பெற்றோர் கிடைகிறார்களோ அந்த பள்ளி சிறந்த பள்ளியாக திகழும். உங்கள் ஒவ்வொரு குழந்தைகளுக்குள்ளும் அளவற்ற அறிவும் ஆற்றலும் புதைந்து கிடைக்கிறது.அதை வெளிக்கொணர்வதே கல்வியின் நோக்கமாகும். குழந்தைகளின் கல்வியில் பெற்றோருக்கும் பெரும் பங்கு உள்ளது.

கல்வியை கற்று பெரிய உயரத்திற்கு சென்றாலும் இறுதியில் நம் தேசம், நம் மொழி என்ற உணர்வு நமக்கு என்றும் இருக்க வேண்டும்.கொரோனா தொற்றுக்கு பின்னும் இந்தியா நல்ல பொருளாதார வளர்ச்சி பெற்றுள்ளது.நமக்கும் பெரிய எதிர்காலம் இருக்கிறது.உங்களது குழந்தைகளுக்கும் பெரிய எதிர்காலம் இருக்கிறது என்றார்.

மேலும், இவ்விழாவில் பல்வேறு விளையாட்டு மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்ற சிறந்த மாணவர்களுக்கும், முன்னாள் மாணவர்களுக்கும் பள்ளியின் சார்பில் கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கி கெளர விக்கப்பட்டது. தொடர்ந்து பள்ளி மாணவர்களின் கண்ணை கவரும் கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை அனைவரையும் கவர்ந்தது. இவ்விழாவில் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க