• Download mobile app
04 May 2024, SaturdayEdition - 3006
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மேக்னடிக் மான்செஸ்டர் அடல் இன்குபேஷன் சென்டர் ரைஸில் நடத்தப்பட்ட கருத்தரங்கு

December 21, 2022 தண்டோரா குழு

கோவை ஈச்சனாரியில் உள்ள அடல் இன்குபேஷன் சென்டர் ரைஸால் ஏற்பாடு செய்யப்பட்ட தொழில் முனைவோர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மாநாட்டு நிகழ்ச்சி ” மேக்னடிக் மான்செஸ்டர் -ன் இரண்டாம் நாள் நிகழ்வில் தமிழக குறு ,சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் டி.எம்.அன்பரசன் மற்றும் ஸ்டார்அப் டின் -இன் தலைமை நிர்வாக அதிகாரி & மிஷன் இயக்குநர் சிவராஜ் ராமநாதன் தலைமை ஏற்றனர்.

இம்மாநாட்டில் டெட் சர்கிள் கருத்தரங்கு ஒரு முக்கிய நிகழ்வாக இருந்தது. இக்கருத்தரங்கில் கரியமில உமிழ்வு மற்றும் கரியமில தடுப்புக் காரணியுடன் தொடர்புடைய தொழில் முனைவோர்களுக்கான கார்பன் கேப்சரிங் கோஹார்ட் தொடங்கப்பட்டது. இந்நிகழ்வில் வைஸ் எனும் பெண்களுக்கான
புதுமையான தொடக்க சுற்றுச்சூழல் அமைப்பு உருவாக்கப்பட்டது.

இவ்வமைப்பின் நோக்கமானது மகளிர் தொழில் முனைவு ஆதரிப்பதும் ஊக்குவிப்பதறக்குமான முயற்சியை முன்னெடுப்பது ஆகும். மேலும், ஸ்மார்ட் மைண்ட்ஸ் ஹேக்கத்தான் தமிழ்நாடு என்ற மாபெரும் மாநில அளவிலான ஹேக்கத்தான் தொடங்கப்பட்டது. இதில் 250 க்கும் மேற்ப்பட்ட நிறுவனங்கள் , 3000 க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் மற்றும் 1500 க்கும் மேற்ப்பட்ட கண்டுபிடிப்புகள் பங்குபெற்று ஆதரவளிக்கப்பட உள்ளன.

தொழில் முனைவோர்கள் தங்களுக்குள் பரஸ்பர தகவல் மற்றும் வர்த்தகத் தொடர்பிற்காக ஸ்டார்ட்அப் திண்ணை என்னும் ஓர் மன்றம் உருவாக்கப்பட்டது. இந்நிகழ்வில் அடல் இன்குபேஷன் சென்டர் ரைஸின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் மதன் ஏ செந்தில் , துணைத் தலைவர் டாக்டர் . நாகராஜ் பாலக்கிருஷ்ணன் ஆகியோர் பங்குப்பெற்றனர் .

மேலும் படிக்க