• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் நடைபெற்ற மிஸ் தமிழ்நாடு 2023 அழகி போட்டி – அசத்திய பெண்கள்

December 19, 2022 தண்டோரா குழு

கோவை நவஇந்தியா பகுதியில் மிஸ் தமிழ்நாடு அழகிபோட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் , தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

கோவை மற்றும் பொள்ளாச்சியில் இருந்து தலா ஒரு போட்டியாளர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் , 16 போட்டியாளர்களும் பார்வையாளர்கள் முன்னிலையில் பாரம்பரிய மற்றும் மேற்கத்திய உடைகள் அணிந்து பூனை நடைபோட்டு தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் பிக் பாஸ் புகழ் சனம் செட்டி , ஷரினா உள்ளிட்டோர் நடுவர்களாக பங்கேற்றனர்.அவர்கள் ,போட்டியாளர்களிடையே பெண்ணியம் என்பது என்ன ? அழகு என்பது எதில் உள்ளது ? தமிழ் மொழியின் சிறப்புகள் என்ன என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பினர் . இந்த போட்டியில் 21 வயதான அக்ஷதா தாஸ் என்ற போட்டியாளர் மிஸ் தமிழ்நாடு பட்டத்தைப் பிடித்தார்.

அவருக்கு 2023 மிஸ் தமிழ்நாடு போட்டிக்கான கிரீடம் வழங்கப்பட்டது. டாக்டர் தளிகா 2 – வது இடத்தையும், சுபிக்ஷா 3 – வது இடத்தையும் பிடித்தனர்.அவர்களுக்கும் விருதுகள் வழக்கப்பட்டது. பார்வையாளர்களை கவரும் விதமாக நிகழ்ச்சியில் இசை கச்சேரியும் நடைபெற்றது . கோவையில் நடந்த அழகிபோட்டி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது .

மேலும் படிக்க