• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை சரகத்தில் 1211 கிராமங்கள் கஞ்சா பழக்கம் உள்ள கிராமங்களாக கண்டறியப்பட்டுள்ளது – ஐ.ஜி சுதாகர்

December 14, 2022 தண்டோரா குழு

மேற்கு மண்டலத்தில் கடந்த ஆண்டை காட்டிலும் குற்றங்கள் குறைந்துள்ளதாகவும்,கோவை சரகத்தில் 1211 கிராமங்கள் கஞ்சா பழக்கம் உள்ள கிராமங்களாக கண்டறியப்பட்டுள்ளதாக ஐ.ஜி சுதாகர் கூறியுள்ளார்.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மேற்கு மண்டல ஐஜி தலைமையில் கோவை சரக உயர் காவல் அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில் 27 டி.எஸ்.பிகளும் 8 ஏடிஎஸ்பி களும் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். 2022 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட குற்ற சம்பவங்கள் குறித்து சீராய்வு பணியானது மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையில் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஐ.ஜி சுதாகர்,

கடந்த ஆண்டில் கோவை சரதத்தில் 142 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகும் இந்த ஆண்டு 91 கொலைகள் தான் பதிவு செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.அதே சமயம் கடந்த ஆண்டு காட்டிலும் ஆதாய கொலைகள் குறைந்துள்ளதாகவும் சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு வழிப்பறி செய்தல் வெகுவாக குறைந்துள்ளது. சென்ற ஆண்டு 78 வழக்குகள் வழிப்பறியும், இந்த ஆண்டு வந்து 52 வழக்குகள் வந்து பதிவாயிருப்பதாக தெரிவித்தனர்.

அது மட்டும் இல்லாமல் குழந்தைக்கு எதிரான பாலியல் வழக்கில் சென்ற ஆண்டு 431 வழக்குகள் பதியப்பட்டிருந்தது. இந்த ஆண்டு 529 வழக்குகள் பதியப்பட்டிருக்கு எனவும் போக்சோ வழக்கில் 17 வழக்குகளில் தண்டனை கடந்ததாண்டில் பெறப்பட்டு இருப்பதாகவும் இந்த ஆண்டு மட்டும் 87 வழக்குகளில் தண்டனை பெறப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோன்று சென்ற ஆண்டு குண்டர் சட்டத்தில் 123 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் இந்த ஆண்டு 155 பேர் குண்டர் சட்டத்திலும் மூன்று பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று பல்வேறு பகுதிகளில் கஞ்சா ஒழிப்பு, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வுகள் அதிகமாக நடைபெற்று இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். கோவை சரகத்தில் 1211 கிராமங்கள் கஞ்சா பழக்கம் உள்ள கிராமங்களாக கண்டறியப்பட்டுள்ளது. அவற்றிலிருந்து 721 கிராமங்களில் கஞ்சா அறவே ஒழிக்கப்பட்டுள்ளது.இதனால் 60% கஞ்சா ஒழிப்பு பணி நிறைவேறி உள்ளதாக அவர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் மேற்கு மண்டலத்தில் 47 ஆயிரம் கிலோ குட்கா பொருட்கள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பல்வேறு வகையில் காவல்துறை வந்து தன்னார்வைத் தொண்டு அமைப்பின் இணைந்து செய்து வருவதாக தெரிவித்தனர். அதுமட்டுமில்லாமல் தொண்டு நிறுவனம் சார்பாக காவலர்களுக்கு மெடிக்கல் கிட் ( ரத்த அழுத்தம் பார்க்கும் கருவி ) வழங்கப்பட்டது. அவர்களுடைய உடல் ஆரோக்கியத்தை கணக்கில் கொண்டு தினமும் அதை பரிசோதனை செய்து ஒரு புத்தகத்தில் எழுதிக்கொண்டு மருத்துவரை சந்திப்பதற்கான வழிவகை செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க