2,௦௦௦ ஆண்டுகள் பழமை வாய்ந்த நகரத்தை சீன தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இது குறித்து சீன ஆராய்ச்சியாளர் ஒருவர் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக் கிழமை(ஜனவரி 8) கூறியதாவது:
சீன நாட்டின் வடகிழக்கு மாநிலமான லியோனிங் மாநிலத்தில் 2,௦௦௦ ஆண்டுகள் பழமை வாய்ந்த நகரத்தைக் கண்டுபிடித்துள்ளோம். கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் சீனாவின் ஹன்னான் மாவட்டத்தின் ஷேன்யாங் பகுதியில் உள்ள க்வின்ஷுவாங்ஸி நகரில் இந்த ஆராய்ச்சியைக் கடந்த ஆண்டு ஜூலையில் தொடங்கினோம்.
இதுவரை 5௦௦ சதுர மீட்டர் வரை தோண்டப்பட்டுள்ளது. எங்களுடைய தீவிர ஆராய்ச்சிக்கு உட்படுத்த இடத்தில் எஞ்சியுள்ள வீடுகள், சேமிப்பு கிடங்குகள், சாம்பல் குழிகள் மற்றும் கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
அதனுடன், மண்பாண்டங்கள், வெண்கலம் மற்றும் இரும்பு பொருள்கள், ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. கிங்க் சுயங்சி நகர் வெண்கல காலம் முதல் ஹான் வம்சம் வரை (கிமு 2௦2 முதல் கிபி 22௦ வரை) நீண்ட வரலாறு கொண்ட இடம். இந்தப் பகுதியில் கடந்த 2௦௦௦ ஆண்டுகளாக தொடர்ச்சியாக மனிதர்கள் வாழ்ந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்