• Download mobile app
16 Nov 2025, SundayEdition - 3567
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோயம்புத்தூர் மாரத்தான் போட்டியில் தனது 10 ஆண்டுகால வெற்றிகரமான பங்களிப்பை பற்றி பகிர்ந்த எல்ஜி எக்யூப்மென்ட்ஸ்

December 10, 2022 தண்டோரா குழு

உலகின் முன்னணி ஏர் கம்பிரசர் நிறுவனங்களில் ஒன்றான ‘எல்ஜி. எக்யூப்மென்ட்ஸ்’ கோவையில் 2013ல் இருந்து நடைபெறும் கோயம்புத்தூர் மாரத்தான் நிகழ்வில் தன்னுடைய 10 ஆண்டுகால வெற்றிகரமான பங்களிப்பை பற்றி இன்று நடந்த பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் தெரிவித்தது.

இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் ஜெயராம் வரதராஜ் இந்த பத்திரிக்கையில் சந்திப்பில் கலந்து கொண்டு பத்திரிகையாளர்களிடம் பேசினார்.கோயம்புத்தூர் மாரத்தான் என்பது புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை.ஏற்படுத்துவதில் கடந்த 2013 முதல் முழு அர்ப்பணிப்போடு செயல்பட்டு வருகிறது.

இந்த மாரத்தான் போட்டி மூலம் கிடைக்கும் தொகையானது, கோயம்புத்தூர்.கேன்சர் பவுண்டேஷனுக்கு பெரும் நிதியாக செல்ல வழி செய்யப்பட்டுள்ளது,இந்த நிதி, கோயம்புத்தூர் கேன்சர் பவுண்டேஷன் வழங்கும் புற்றுநோய்
விழிப்புணர்வு சேவைகள், புற்றுநோய் பரிசோதனைகள், முற்றிய நிலை புற்றுநோய்க்கான சேவைகள் ஆகியவற்றை விரிவுபடுத்த உதவியுள்ளது.இந்த ஆண்டு நடைபெறும் கோயம்புத்தூரு மாரத்தான் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நேரடி போட்டியாக நடைபெறுகிறது.

பத்தாவது முறையாக நடைபெறும் இந்த போட்டியில் இந்த ஆண்டு 16,500 மக்கள் கலந்து கொள்கின்றனர்.இவர்களில் கிட்டத்தட்ட 2000 பேர் எல்ஜி நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் என்று இந்த நிகழ்வில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் படிக்க