• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஹிந்துஜா குழுமத்தின் மைன்ட்மேஸ் இந்தியா, அமெரிக்க சந்தைகளில் செயலாக்க விரிவாக்கம்

December 9, 2022 தண்டோரா குழு

ஹிந்துஜா குழுமத்தின் ஒரு அங்கமாக திகழும், இந்தியாவை சேர்ந்த நரம்பியல் விஞ்ஞானி நிறுவிய மைன்ட்மேஸ், நரம்பியல் தொழில்நுட்பத்தில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவதில், அமெரிக்கா மற்றும் இந்தியாவில் முன்னணி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.புதுடில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை உட்பட நாடு முழுவதும் 12 க்கும் மேற்பட்ட மருத்துவ நிறுவனங்களில் செயல்பாடுகளைக் கொண்டுள்ளது மைன்ட்மேஸ் இந்தியா.

அமெரிக்கா சந்தையில், வைப்ரா ஹெல்த்கேர் நிறுவனத்துடன் இணைந்து மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு பின் நோயாளிகளை கவனிப்பதில் முன்னணி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. மைன்ட்மேஸ் டிஜிட்டல் ஹெல்த் தொழில்நுட்ப தளங்கள் (மைன்ட்போட் மற்றும் மைன்ட்மோஷன்கோ) கிளினிக் மற்றும் வீடுகளில் வைப்ரா மருத்துவமனைகளின் நோயாளிகளை கவனிக்கிறது. வைப்ரா ஹெல்த்கேர் அமெரிக்காவில் 19 மாகாணங்களில் 90 சிறப்பு மருத்துவமனைகளில் மாற்று வகை மருத்துவ கவனிப்பு மற்றும் வசதிகளை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 1 கோடி அமெரிக்கன்கள், நரம்பியல் தொடர்பான வியாதிகளில் பாதிக்கப்பட்டோர் பயனடைந்து வருகின்றனர்.

மைன்ட்மேஸ் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி டாக்டர் தேஜ் டாடி கூறுகையில்,

“மிகவும் தீவிரமான நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, தொடர்ந்து அவர்களை கவனித்து குணமடையச் செய்ய மைன்ட்மேஸ், நிருபிக்கப்பட்ட தீர்வுகளை அளித்துள்ளது. மிகவும் சக்திவாய்ந்த, டிஜிட்டலில் பயன்படும் வகையில் அதிநவீன தொழில்நுட்ப கருவிகளை அளிப்பதில் முழு கவனம் செலுத்தி வருகிறோம். நோயாளிகள், அவரது குடும்பத்தினர் எளிதாக பயன்படுத்தம் வகையில், தீர்வுகளை அளிக்கிறோம். வைப்ராவை பொறுத்தவரை உலத்தரம் வாய்ந்த பங்குதாராகவும், நம்பகத்தன்மை மிக்கவகையில், நோயாளிகளின் மூளை நலனின் மாற்றம் தந்து, மேம்படும் வகையில் தீர்வுகளை அளித்து வருகிறோம். மைன்ட்மேஸ், உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் நரம்பு வியாதிகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை தொடர்ந்து கண்காணித்து மேம்படுத்திக் கொள்ள தொழில்நுட்ப ரீதியான திறனை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது,” என்றார்.

மைன்ட்மேஸ், பக்கவாதம்ஃ தீவிர மூளைக் காயம், முதுகு தண்டுவடங்களில் ஏற்படும் காயம், பார்க்கின்சன் நோய்கள் போன்றவைகளுக்கு மென்பொருள்களை பயன்படுத்தி அவற்றை மதிப்பீடு செய்து தீர்வுகளை அளிக்கிறது. நீண்ட கால நோய்களையும் கண்காணித்து அளவிட்டு, அவற்றை மேலாண்மை செய்யும் திறனை கொண்டது. சில விளையாட்டினை அடிப்படையாகக் கொண்ட கேம் பயிற்சிகள், நோயாளிகளின் மறுவாழ்விற்கு உதவியுள்ளது. (உதாரணமாக – நகர முடியாமல் சக்கர நாற்காலிகளை பயன்படுத்தி வந்த பல நோயாளிகள், எழுந்து நடமாடி வருகின்றனர்) இயல்பான வாழ்க்கைக்கு திரும்பி, மைன்ட்மேஸ் க்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க