• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கலஷா பைன் ஜுவல்லரி நகைகள் கண்காட்சி துவக்கம் !

December 8, 2022 தண்டோரா குழு

கலஷா பைன் ஜூவல்ஸ் சார்பில், கைவினை தங்க நகை கண்காட்சி கோவை அவிநாசி ரோட்டில் உள்ள தி ரெசிடென்ஸி ஓட்டலில் இன்று துவங்கியது.

துவக்க விழாவில் சென்னை தீபா கேஸ் ஏஜென்சீஸ் பங்குதாரர் டி.சுகந்தி சிறப்பு விருந்தினராக பங்கேற்று கண்காட்சியை குத்துவிளக்கு ஏற்றி துவக்கிவைத்தார். கௌரவ விருந்தினராக திருப்பூர் ஜவுளி தொழில் முனைவோர் மற்றும் இல்லத்தரசி தீப்தி பியுஷ் சங்கை, பெரியநாயக்கன்பாளையம் சபிதா வெங்கடேசன்,கதிர் கல்வி நிறுவனங்களின் செயலாளர் லாவண்யா கதிர், குழந்தை ஆடைகள் நெசவு பிராண்ட் இயக்குனர் ஃ இணை நிறுவனர் உமா பாலாஜி உள்ளிட்டோர் துவக்க விழாவில் பங்கேற்றனர்.

இக்கண்காட்சி 2022 டிசம்பர் 8, 9, 10 ஆகிய தேதிகளில் நடக்கிறது. தங்கம், வைரம், ஜடாவு, வெள்ளி மற்றும் சொகுசான நகைகள், அளவற்ற வகையில் அனைத்து டிசைன்களிலும் இடம் பெற்றுள்ளது. கலஷா, இந்தியாவின் கலை, தொழில்நுட்பங்களைக் கொண்டு, தங்க, வைர மற்றும் பிளாட்டின நகைகளில் பொக்கிஷமாக திகழ்கிறது. கண்காட்சிக்கு என்றே பிரத்யோகமாக மிகத்திறமையாக வடிவைமக்கப்பட்ட,கலை நயமிக்க நகைகள் இடம் பெற்றுள்ளன.எவ்வித லாபநோக்கமும் இல்லாமல்,நேர்த்தியான முறையில் இந்த கண்காட்சியை வசதியானவர்களை மகிழ்விக்கும் வகையில் கலஷா இயக்குனர் அபிஷேக் சந்தா அமைத்துள்ளார்.
புதிய கருத்துரு கொண்ட இன மணமக்களுக்கான நகை சேகரிப்புகள் கோவையில் அறிமுகம் செய்யப்படவுள்ளன. புதுமையான தங்க மற்றும் ஜடாவு நககைகள், இந்திய கலையின் வேரிலிருந்து உருவாக்கப்பட்டவை. கோயில் நகைகள், ஒவ்வொரு நாளுக்கும் புதுமையான நகைகள் மற்றும் விழாக்கால நகைகள் என, பெண்களுக்கே ஏற்ற வகையிலான நகை சேகரிப்புகள் இடம் பெற்றுள்ளன.இந்தியர்களின் மனதை தொடும் வகையில், பழமையும் கலாச்சாரமும் நிறைந்த புதுமையான நகைகள் இடம் பெற்றுள்ளன.

இக்கண்காட்சி குறித்து அபிஷேக் சந்தா கூறுகையில்,

‘‘தனித்துவமிக்க பாரம்பரிய மற்றும் பழமையான நகை கலெக்சன்கள், மணப்பெண்களுக்கு அழகு தருவதாக அமையும். அணியும் மணப்பெண், ஒரு ராணியை போன்று தோற்றம் தரும் பாரம்பரிய வடிவமைப்புகளுடன் அனைத்து, பல்வேறு வகையான நகைகள், கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன,” என்றார்.

மேலும் படிக்க