• Download mobile app
16 Nov 2025, SundayEdition - 3567
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா சார்பாக நடைபெற்ற வீடு மற்றும் கார்களுக்கான சிறப்பு கடன் மேளா

December 3, 2022 தண்டோரா குழு

கோவையில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா சார்பாக நடைபெற்ற வீடு மற்றும் கார்களுக்கான சிறப்பு கடன் மேளாவில் பொதுமக்கள், வங்கி வாடிக்கையாளர்கள்,சிறு குறுந்தொழில் முனைவோர், என பலர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள ஜி.பி.கிராண்ட் கேலக்சி அரங்கில் எஸ்.பி.ஐ. வங்கியின் கோவை வடக்கு மண்டலம் சார்பாக வீடு மற்றும் கார் லோன்களுக்கான சிறப்பு முகாம் மற்றும் கண்காட்சி நடைபெற்றது.. முன்னதாக நடைபெற்ற இதன் துவக்க விழாவில் ஸ்டேட் வங்கி மண்டல பொது மேலாளர் திலீப் சிங் யாதவ் தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினராக கோவை மாவட்ட காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்பு முகாம் மற்றும் கண்காட்சியை துவக்கி வைத்தார்.இதில் கோவை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த கட்டுமான நிறுவனத்தினர், வாகனங்கள் தொடர்பான டீலர் நிறுவனம் என பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன.

மேலும் இந்த கடன் முகாமில், கல்விக்கடன் சிறுகுறி மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான அரசு திட்டம் சார்ந்த கடன் வழங்குவதற்கான தனித்தனி ஸ்டால்களும் அமைக்கப்பட்டிருந்தன. இந்த லோன் நாளாவில் குறைந்த வட்டி வீதம் கடன் டாக்குமெண்டேஷன் இலவசம் பரிசீலனை கட்டணம் தள்ளுபடி பெற வங்கிகள் மற்றும் விதிமுறைகள் வாங்கிய கடன் மீது கூடுதல் கடன் போன்ற சிறப்பு சலுகைகளை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வழங்க உள்ளதாக வங்கியின் மண்டல பொது மேலாளர் தெரிவித்தார்.

ஒரு நாள் நடைபெற்ற இந்த சிறப்பு கடன் மேளாவில்,பொதுமக்கள், வங்கி வாடிக்கையாளர்கள்,சிறு குறுந்தொழில் முனைவோர், மாணவர்கள் என பலர். கலந்து கொண்டு பயனடைந்தனர்.

மேலும் படிக்க