கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் 95வது வார்டுக்குட்பட்ட என்.பி இட்டேரி ஒன்பதாவது வீதி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ரூ.65.50 லட்சம் மதீப்பீட்டில் புதிதாக நான்கு வகுப்பறைகள் கட்டுமான பணிகள், 85வது வார்டுக்குட்பட்ட பகுதியில் குறிச்சி மைதானம் முதல் உழவர் சந்தை வரை ரூ.50.70 லட்சம் மதிப்பீட்டில் 650 மீட்டர் தொலைவிற்கு புதிதாக தார் சாலை அமைக்கும் பணிகள் மேயர் கல்பனா ஆனந்தகுமார் மற்றும் மாநகராட்சி கமிஷனர் பிரதாப் ஆகியோரால் பூமி பூஜை செய்து தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து வசந்தம் நகர் பகுதியில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில்புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை அவர்கள் திறந்து வைத்தார்கள். இந்நிகழ்ச்சியில் தெற்கு மண்டல தலைவர் தலைட்சுமி, ஆளுங்கட்சித்தலைவர் கார்த்திகேயன், உதவி கமிஷனர்அண்ணாதுரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு