• Download mobile app
16 Nov 2025, SundayEdition - 3567
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காசி தமிழ் சங்கமம் ரயில் கோவையில் இருந்து இன்று காலை கிளம்பியது

November 27, 2022 தண்டோரா குழு

காசிக்கும் தமிழகத்திற்குமான ஆன்மீகம், கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு தொடர்புகளை வலுப்படுத்தும் வகையில் மத்திய அரசு நடத்திவரும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்காக தமிழகத்திலிருந்து செல்லும் 5வது ரயில் சேவை கோயம்புத்தூரில் இருந்து இன்று அதிகாலை 5 மணியளவில் துவங்கியது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த 90 பயணிகள் கோயம்புத்தூர் ரயில் நிலையத்திலிருந்து காசி தமிழ் சங்கமம் ரயிலில் தங்களது பயணத்தை இன்று துவங்கினர்.கடந்த 20ம் தேதி கோவையிலிருந்து சென்ற ரயிலில் கைவினைப் பொருட்கள் தயாரிப்பாளர்கள், விசைத்தறி நெசவாளர்கள் மற்றும் இசை கலைஞர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

இன்று கோவையிலிருந்து கிளம்பியுள்ள ரயிலில் வணிகர்கள் மற்றும் தொழில்முனைவோர்கள் பலர் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கோவை ரயில் நிலையத்திலிருந்து காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு செல்லும் பயணிகளை பாரதிய ஜனதா கட்சியினர் வாழ்த்தி வழி அனுப்பி வைத்தனர்.இந்த வழியனுப்பு நிகழ்வில் பாஜக வழக்கறிஞர் பிரிவின் மாநிலத் தலைவர் வணங்காமுடி, ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவின் மாநில செயலாளர் அரசூர் அசோகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

காசி தமிழ் சங்கமம் ரயில் சேவை கோயம்புத்தூர் ரயில் நிலையத்திலிருந்து இன்று அதிகாலை துவங்கப்படுவதையடுத்து ரயில்வே மற்றும் மாநகர காவல்துறையினர் 200க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் படிக்க