• Download mobile app
16 Nov 2025, SundayEdition - 3567
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் உள்ள லிஸ்யு பள்ளியின் ஐம்பதாம் ஆண்டு பொன்விழா

November 26, 2022 தண்டோரா குழு

கோவையில் உள்ள லிஸ்யு பள்ளியின் ஐம்பதாம் ஆண்டு பொன்விழாவில் பப்புவா நியூ கினியா நாட்டின் இந்திய வர்த்தக ஆணையர் விஷ்ணு பிரபு கலந்து கொண்டார்.

கோவை சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள லிஸ்யு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி கடந்த 1972 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. 50 ஆண்டுகளாக பல மாணவர்களை, சாதனையாளர்களாக உருவாக்கியுள்ள இந்த பள்ளி தற்போது 50 ஆம் ஆண்டு பொன்விழாவை கொண்டாடி வருகிறது.பள்ளி நிர்வாகம் முன்னாள் மாணவர்கள் இணைந்து நடத்தி வரும் பொன் விழாவை முன்னிட்டு நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தொழிலதிபரும் பப்புவா நியூ கினியா நாட்டின் இந்திய வர்த்தக ஆணையர் விஷ்ணு பிரபு மற்றும் காருண்யா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் மன்னர் ஜவகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து ஐந்து நாட்கள் நடைபெறும் பொன்விழா நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக வரும் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு விருந்தினராக மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளதாக பள்ளியின் முதல்வர் பால் தக்கினேட் தெரிவித்தார். விழாவில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த சாதனையாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

பொன்விழாவை முன்னிட்டு பள்ளி குழந்தைகளின் நடனம் மற்றும் இசை நிகழ்ச்சி பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.

மேலும் படிக்க