• Download mobile app
16 Nov 2025, SundayEdition - 3567
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆளுநர் மாளிகை நோக்கி நடக்கும் பேரணியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் பங்கேற்பு

November 25, 2022 தண்டோரா குழு

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட தலைவர் சு.பழனிசாமி கூறியிருப்பதாவது:

ஜிஎஸ்டி காரணமாக தமிழகத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு தொழில்கள் மூடப்பட்டு 5 லட்சம் பேர் வேலை இழந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. தேசிய குற்றப் பதிவு ஆணையம் கடந்த ஆண்டு 42 ஆயிரம் தினக்கூலிகள் தற்கொலை செய்திருப்பதாக தெரிவிக்கிறது. ஒரு புறம் இடுபொருட்களின் விலையேற்றம், மறுபுறம் விளைபொருட்களுக்கு சந்தையில் உரிய விலை கிடைக்காமை, ஆகியவற்றால் விவசாயிகள் வேளாண் தொழிலை தொடர்ந்து செய்ய முடியாமல் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கிறார்கள்.

ஒன்றிய அரசு கொடுத்த வாக்குறுதியை மீறி மின்சாரத் திருத்த சட்டம் மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்பியுள்ளது. விவசாயிகள் மட்டுமல்லாமல் அனைத்து மக்களின் பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கான போராட்டத்தில் விவசாயிகளின் பேரியக்கமான ஐக்கிய விவசாயிகள் முன்னணி உள்ளது. வரும் 26ம் தேதி வாக்குறுதியை நிறைவேற்றாத மோடி அரசை கண்டித்தும், தமிழகத்தில் டெல்லியின் முகவராக செயல்பட்டு அரசியலமைப்புக்கு விரோதமாக ஈடுபட்டுவரும் ஆளுநரைக் கண்டிக்கும் வகையிலும் தமிழக ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையை நோக்கி மாபெரும் பேரணியை நடத்த உள்ளது. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோவை மாவட்ட குழு கலந்து கொள்ள உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க