• Download mobile app
16 Nov 2025, SundayEdition - 3567
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கையில் அல்வாவுடன் ஆட்சியர் அலுவலகத்தில் மனு

November 21, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்டம் வேடப்பட்டி சத்யா நகரை சேர்ந்தவர் ஜெகநாதன்.திமுகவைச் சேர்ந்த இவர் ஆடு மேய்க்கும் தொழில் நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு இவரது 12 ஆடுகளை இவரது வீட்டின் அதிக வசிக்கும் அதிமுகவை சேர்ந்த செந்தில், பழனியப்பன், பாண்டியன் ஆகியோர் விஷம் வைத்து கொண்டு விட்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக அவர் வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக புகார் தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கையில் அல்வாவுடன் வித்தியாசமான முறையில் மனு அளிக்க வந்தார்.

அப்போது அவர் கூறுகையில்

எனது புகார் தொடர்பாக எந்த நடவடிக்கை எடுக்காமல் கடந்த மூன்று ஆண்டுகளாக தான் தொடர்ந்து அலைக்கழிக்கப்படுவதாகவும் எனது ஆடுகளை திருப்பி அளித்து குற்றம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார். மேலும் மூன்று வருடங்களாக எனக்கு அல்வா அல்வா கொடுத்தவர்களுக்கு தற்போது அல்வா கொடுக்கவே அல்வாவை எடுத்து வந்ததாக கூறினார்.

மேலும் படிக்க