வ.உ.சி பூங்காவில் 16 அடி உயரத்தில் வ.உ.சிதம்பரனாருக்கு சிலை அமைக்கப்படும் எனவும் நெல்லை, தூத்துகுடி,மாவட்டங்களில் அரசு கட்டிடங்களுக்கு வ.உ.சி பெயர் வைக்கப்படும் என செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறியுள்ளார்.
கோவை வ.உ.சி பூங்காவில் வ.உ.சிதம்பரனார் சிலை அமைய உள்ள இடத்தினை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இன்று மாலை பார்வையிட்டார்.அமைச்சர் சாமிநாதனுடன் கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப்,மேயர் கல்பனா மற்றும் உயர் அதிகாரிகள இருந்தனர்.
வ.உ.சி பூங்காவில் 16 அடி உயரத்தில் வ.உ.சிதம்பரனாருக்கு சிலை அமைக்கப்படுகின்றது.இடத்தை பார்வையிட்ட பின்னர் அமைச்சர் சாமிநாதன் பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது,
வ.உ.சி சிலை கோவையில் அமைக்கப்படும் என முதல்வர் சட்டமன்றத்தில் அறிவித்தை தொடர்ந்து அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றது.தற்போது இடம் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், 40 லட்சம் மதிப்பில் சிலை அமைக்கப்படும் எனவும்
கோவை மாநகராட்சியிலும் சிலை அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என தெரிவித்த அவர், கோவைக்கும் வ.உ.சிதம்பரனாருக்கும் நீண்ட தொடர்பு உண்டு.
குறிப்பாக நெல்லை,தூத்துகுடி மாவட்டங்களில் அரசு கட்டிடங்களுக்கு வ.உ.சி பெயர் வைக்கப்பட இருக்கின்றது.வ.உ.சி வீட்டில் ஒளி ,ஒலி காட்சி அமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். உச்சநீதிமன்றம் சிலைகளை சாரழலைகளில் இருந்து பூங்காகளுக்கு மாற்ற அறிவுறுத்தி இருக்கின்றது எனவும்,இனிமேல் வைக்கப்படும் சிலைகளை மட்டும் பூங்காவில் வைக்க நீதிமன்றத்தில் முறையிட இருக்கின்றோம். மேலும் 3 மாத காலத்தில் கோவையில் வ.உ.சி சிலை அமைக்கப்படும் என தெரிவித்தார்.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்