• Download mobile app
16 Nov 2025, SundayEdition - 3567
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளியான கலக தலைவன் வெளியானதை முன்னிட்டு நலத்திட்ட உதவி

November 18, 2022 தண்டோரா குழு

உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளியான கலக தலைவன் வெளியானதை முன்னிட்டு,கோவை மாநகர உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக கோவையை சேர்ந்த ஏழை குடும்பத்தினருக்கு தொழில் துவங்க நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.

சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தி.மு.க.இளைஞரணி தலைவரும்,பிரபல நடிகரும் ஆன உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடித்துள்ள கலக தலைவன் திரைப்படம் நாடு முழுவதும் உள்ள தியேட்டர்களில் இன்று வெளியானது.இந்நிலையில் இதனை கொண்டாடும் விதமாக உதயநிதி நடித்த கலக தலைவன் வெளியான கோவை சாந்தி திரையரங்கம் முன்பாக, கோவை மாநகர உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இதில்,ஏழை குடும்பத்திற்கு புதிதாக தொழில் துவங்க டிபன் கடை தள்ளு வண்டியை கோவை மாநகர உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில்
கோவை மாவட்ட தலைவர் இருகூர் உதய பூபதி, கோவை மாவட்ட செயலாளர் உதயநிதி பாபு ஆகியோர் தலைமை தாங்கினர்.கோவை மாநகர தலைவர் டேவிட் ராஜா,கோவை மாநகர செயலாளர் முனி பாண்டி ராகுல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக கோவை மாநகராட்சி துணை மேயர் வெற்றிச்செல்வன் கலந்து கொண்டு வாகனத்தை வழங்கினார்.முன்னதாக உதயநிதி ரசிகர்,ரசிகைகள் திரைப்படம் பார்க்க வந்த அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாநகர நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க