• Download mobile app
16 Nov 2025, SundayEdition - 3567
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

24 மணி நேர குடிநீர் திட்டப்பணிகளுக்காக கோவை மாநகராட்சிக்கு விருது !

November 17, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்‌ 24 மணி நேர குடிநா்‌ திட்டம்‌ சூயஸ்‌ நிறுவனம்‌ மூலம்‌ செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக தற்போது குடிநர்‌ குழாய்‌,மேல்நிலைத்‌ தொட்டி அமைக்கும்‌ பணிகள்‌ நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில்‌ சூயஸ்‌ நிறுவனம்‌ 24 மணி நேர குடிநீர் திட்டத்தில்‌ பல புதிய தொழில்‌ நுட்பங்களை உபயோகப்படுத்தி உள்ளது. இந்த தொழில்நுட்பத்திற்காக ஹைதராபாத்தில்‌ நடைபெற்ற Geosmart India விருது வழங்கும்‌ விழாவில்‌ கோவை மாநகராட்சியில்‌ 24 மணி நேர குடிநீர் திட்டப்பணிகளுக்காக “சிறந்த புவியியல்‌ தகவல்‌ பயன்பாட்டு செயலி” என்ற விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இந்த விருதை மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாபிடம், மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா, திட்ட மேலாண்மை ஆலோசகர்‌ குழு தலைவர்‌ கோபாலகிருஷ்ணன்‌ ஆகியோர்‌ ஒப்படைத்தனர்‌.

மேலும் படிக்க