• Download mobile app
16 Nov 2025, SundayEdition - 3567
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு குறித்து விழிப்புணர்வு

November 16, 2022 தண்டோரா குழு

குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் கோவை முதல் கோவா வரை இருசக்கர வாகன பயணத்தை ரோட்டரியல் இண்டஸ்ட்ரி சிட்டியினர் முன்னெடுத்துள்ளர்.

கோவை மாவட்ட ரோட்டரியல் இண்டஸ்ட்ரி சிட்டி சார்பாக குழந்தைகள் தினத்தை முன்னிட்டும் உலக குழந்தைகள் வாரத்தை முன்னிட்டும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கோவை முதல் கோவா வரை செல்லும் இருசக்கர வாகன விழிப்புணர்வு பயணம் மேற்கொள்ளப்படுகிறது. இதில் 25 இரு சக்கர வாகனங்கள் பங்கேற்கின்றன.

இந்த பயணத்தை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும் இதில் பங்கு பெறுவோர்க்கு பாராட்டுகளையும் தெரிவித்தார். இவ்விழாவில் ரோட்டேரியன் ராஜ்மோகன் நாயர், ரோட்டரியல் இண்டஸ்ட்ரி சிட்டி நிறுவன தலைவர் பிரபு சங்கர், கிளப் நிர்வாகிகளான கனகராஜ், சஃபி உல்லா, உமா பிரபு, சண்முகானந்தம், பிரேம் செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும் படிக்க