• Download mobile app
16 Nov 2025, SundayEdition - 3567
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 114 கிமீ சாலை, மண் சாலையாகவே உள்ளது – அமைச்சர் செந்தில் பாலாஜி

November 15, 2022 தண்டோரா குழு

கோவையில் 114 கிமீ சாலை, மண் சாலையாகவே உள்ளது என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி தனது டுவிட்டர் பக்கத்தில்,

தமிழகத்தின் இரண்டாவது பெரிய மாநகராட்சியான கோவை மாநகராட்சியில், இன்னமும் 114 கிமீ சாலை, மண் சாலையாகவே உள்ளது, இதுதான் பத்தாண்டு ஆட்சி செய்த அதிமுக அரசின் சாதனை.கடந்த 18 மாத திமுக ஆட்சியில் கோவை மாநகராட்சியில் 144 கிமீ சாலை பணிகளுக்கு 211.80 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

வார்டு எண் 87, 88களில்,அதிமுக ஆட்சியில் மழை நீர் வடிகால் அமைக்க நிதி ஒதுக்கி பணிகளை செய்திருந்தால் இப்பொழுது ஏன் மழை நீர் தேங்கப் போகிறது? கோவைக்கு சிறப்பு நிதி ரூ.200 கோடியை ஒதுக்கிய மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் இதற்கும் நிதி வழங்கி தீர்வு காண்பார்கள்.

அப்பகுதிகளை மேயர், ஆணையர், அதிகாரிகள் ஆய்வு செய்து பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன. அதிமுக ஆட்சியில் நிதி ஒதுக்காமல், ஆணையர் மூலம் பேப்பர் அளவில் தீர்மானம் மட்டும் பதிவு செய்துவிட்டு, திமுக ஆட்சி பணிகளை ரத்து செய்து விட்டது என இப்பொழுது அதிமுக சொல்வது வேடிக்கையாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க