• Download mobile app
16 Nov 2025, SundayEdition - 3567
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் நடைபெற்ற நீரிழிவு நோய் விழிப்புணர்வு வாக்கத்தான்

November 14, 2022 தண்டோரா குழு

கோவை நீரிழிவு நோய் சிறப்பு மையம் அண்டு மருத்துவமனை, இந்திய மருத்துவ சங்கம் கோவை கிளை மற்றும் ரோட்டரி சங்கங்கள் சார்பில் நீரிழிவு நோய் விழிப்புணர்வு வாக்கத்தான் இன்று நடைபெற்றது.

நீரிழிவு நோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14-ம் தேதி உலக நீரிழிவு நோய் விழிப்புணர்வு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. நீரிழிவு நோய்க்கு மருந்தாக பயன்படும், இன்சுலினை கண்டுபிடித்த ‘பேண்டிங்க் அண்ட் பெஸ்ட்’ என்ற விஞ்ஞானியின் பிறந்த நாளான நவம்பர் 14-ந் தேதி “உலக நீரிழிவு நோய்” தினமாக, உலக சுகாதார நிறுவனம் அறிவித்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இன்று உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு இந்திய மருத்துவ சங்கம், ரோட்டரி சங்கங்கள் மற்றும் கோவை நீரிழிவு நோய் சிறப்பு மையம் அண்டு மருத்துவமனை ஆகியவை இணைந்து கோவை நேரு விளையாட்டு அரங்கம் முன்பு இன்று காலை 8.00 மணிக்கு துவங்கியது. இந்த விழிப்புணர்வு வாக்கத்தான் நிகழ்வை கோயம்பத்தூர் மாநகர சுகாதாரத் சேவை துறை இணை இயக்குனர் டாக்டர் சந்திரா கொடியசைத்து துவக்கிவைத்தார்.

இந்த வாக்கத்தான் கோவை நேரு விளையாட்டு அரங்கில் துவங்கி பார்க் கேட் வழியாக ராம்நகர் விவேகானந்தா சாலை வழியாக கோவை நீரிழிவு நோய் சிறப்பு மையத்தை வந்தடைந்தது.

இதுகுறித்து கோவை நீரிழிவு நோய் சிறப்பு மையம் அண்டு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் பாலமுருகன் கூறியதாவது,

சர்க்கரை நோயானது இன்று உலக அளவில் சுகாதார அமைப்பிற்கு செலவினங்களை அதிகப்படுத்தும் ஒரு மிகப்பெரிய நோயாக இருக்கின்றது. உலகிலேயே இன்று இந்தியாவிலேயே கிட்டத்தட்ட 77 மில்லியன் சர்க்கரை நோயாளிகள் இருக்கின்றார்கள். இந்த வருட உலக சர்க்கரை நோய் தினத்தின் முக்கிய கருத்தானது தரமான சர்க்கரை நோய் சிகிச்சை அனைவருக்கும் சென்று சேர வேண்டும் என்பதாகும் என்றார்.

இந்நிகழ்வில் ரோட்டரி மாவட்டம் 3201-ன் மண்டலம் 5-ன், மாவட்ட இயக்குனர் ரோட்டேரியன் மயில்சாமி மற்றும் கோயம்பத்தூர் மருத்துவர்கள் சங்க கோவை கிளையின் தலைவர் டாக்டர். என்.சத்யன் ஆகியார் முன்னிலை வகித்தனர்.இந்த விழிப்புணர்வு மாரத்தான் நிகழ்வில் கல்லூரி மாணவ மாணவியர்கள், நீரிழிவு நோய் பாதித்தவர்கள், கோவை நீரிழிவு நோய் சிறப்பு மையம் அண்டு மருத்துவமனையின் மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள், ரோட்டரி சங்க உறுப்பினர்கள் மற்றும் கோயம்பத்தூர் மருத்துவர்கள் சங்க கோவை கிளையின் மருத்துவர்கள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள்.

இந்த வாக்கத்தான் கோவை நேரு விளையாட்டு அரங்கில் துவங்கி பார்க் கேட் வழியாக ராம்நகர் விவேகானந்தா சாலை வழியாக கோவை நீரிழிவு நோய் சிறப்பு மையத்தை வந்தடைந்தது.

மேலும் படிக்க