• Download mobile app
16 Nov 2025, SundayEdition - 3567
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிங்காநல்லூர் முதல் ஹோப்காலேஜ் வரை 4 வழிச்சாலையாக மாற்ற வலியுறுத்தல்

November 10, 2022 தண்டோரா குழு

சிங்காநல்லூர் முதல் ஹோப் காலேஜ் வரை உள்ள காமராஜர் சாலையை, நான்கு வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து, கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் நுகர்வோர் அமைப்பின் செயலர் லோகு சென்னையில் உள்ள நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

கோவை நெடுஞ்சாலை தெற்கு உபகோட்டம், சிங்காநல்லூர் – ஹோப்காலேஜ் வரை செல்லும் காமராஜர் சாலையில் தற்போது, காலை முதல் இரவு வரை எந்நேரமும் கார், இருசக்கர வாகனங்கள், பேருந்துகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன.மேலும், ஹோப்காலேஜ் சிக்னலில் இருந்து, மசக்காளிபாளையம் வரையில் உள்ள சாலையில் இருந்து காமராஜர் சாலைக்கு செல்ல ஏராளமான குறுக்குச் சாலைகள் உள்ளன.

அதுதவிர, சிங்காநல்லூர் பேருந்து நிலையம் உள்ளதால், இங்கிருந்து மதுரை, திருச்சி செல்லும் ஆம்னி பேருந்துகளால் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக, பண்டிகை நாள்களில் சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து ஹோப் காலேஜ் வரை சாலையில் ஆம்னிப் பேருந்துகள் அணிவகுத்து நிற்கும். இதனால், அப்பகுதியில் வாகனங்கள் தேக்கம் தவிர்க்க முடியாமல் உள்ளது.

மணீஸ் திரையரங்கம், ராமானுஜ நகர், இஎஸ்ஐ மருத்துவமனை உள்ளிட்ட நெரிசல் மிகுந்த இடங்களில் சாலை குறுகலாக உள்ளதாலும், அவ்வழியாக அதிவேகத்தில் செல்லும் வாகனங்களாலும், அப்பகுதியில் விபத்துகள் அடிக்கடி நடக்கின்றன. எனவே, போக்குவரத்து நெரிசல், வாகன எண்ணிக்கை அதிகரிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, சிங்காநல்லூர் முதல் ஹோப் காலேஜ் வரை உள்ள காமராஜர் சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க