• Download mobile app
29 Apr 2024, MondayEdition - 3001
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மனிதநேய ஃபவுண்டேஷன் டிரஸ்ட் பல்வேறு துறை சார்ந்த சமூக செயல்பாட்டாளர்களுக்கு விருது

November 5, 2022 தண்டோரா குழு

மனிதநேய ஃபவுண்டேஷன் டிரஸ்ட் நான்காம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு பல்வேறு துறை சார்ந்த சமூக செயல்பாட்டாளர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

மனித நேய ஃபவுண்டேஷன் டிரஸ்ட் சார்பாக தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக கோவை அரசு மருத்துவமனை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் ஆதரவற்றோர்களுக்கு தொடர்ந்து தினமும் உணவு வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் மனித நேய பவுண்டேஷன் டிரஸ்ட் நான்காம் ஆண்டு துவக்க விழா மற்றும் சிறந்த சமூக செயல்பாட்டாளர்களுக்கு விருது வழங்கும் கோவை பிசி ஃபுட் அரங்கில் நடைபெற்றது.டிரஸ்டின் நிறுவன தலைவர் சுலைமான் தலைமையில் நடைபெற்ற இதில்,ஆலோசகர் ஜெம் சாதிக் அனைவரையும் வரவேற்று பேசினார்.மனித நேய டிரஸ்ட் ஒருங்கிணைப்பாளர், உம்மர், அறம் சேவா அறக்கட்டளை தலைவர் அயூப் தென்றல் சித்திக், சமூக ஆர்வலர் சுலக்சனா தலைமை ஆசிரியை சாரதா முத்துபாய் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ஓய்வு பெற்ற நீதிபதி முகமது ஜியாபுதீன்,தி.மு.க.மாநகர மாவட்ட துணை செயலாளர் கோட்டை அப்பாஸ்,தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி,குறிச்சி பகுதி கழக செயலாளர் காதர்,சென்னை மொபைல்ஸ் சம்சு அலி,79 வது மாமன்ற உறுப்பினர் வசந்தாமணி, ரோட்டரி கிளப் துணை ஆளுநர் ரிட்டன் சசிகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் தன்னலம் பாராமல் சமூக பணியாற்றும் பல்வேறு சமூக அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள், மனித நேய பவுண்டேஷன் டீரஸ்ட் உறுப்பினர்கள் ஆகியோருக்கு சிறந்த சமூக செயல்பாட்டாளர் விருது வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட பொது செயலாளர் கோட்டை செல்லப்பா,மனித நேய ஜனநாயக கட்சி அப்பாஸ், ஷாஜஹான், தி.மு.க.பகுதி செயலாளர் ஜெய்னுலாப்தீன், மற்றும் சௌகத் அலி,ராஜ்குமார்,சிங்கை மதன்,முஜீப் இப்ராஹீம்,கலீல்,சாகுல் அமீது,ஓட்டல் நியூ அன்னபூர்ணா பாலகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிகளை மனிதநேய ட்ரஸ்ட் நிர்வாகிகள் உசைன், தாஹிர், அசார், சஞ்சய் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

மேலும் படிக்க