• Download mobile app
16 Nov 2025, SundayEdition - 3567
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் நான்கு அடி முருகன் சிலை பறிமுதல் செய்த சிலை தடுப்பு பிரிவு போலிசார்

November 4, 2022 தண்டோரா குழு

கோவை உக்கடம் செல்வபுரம் புறவழிச் சாலையில் பாஸ்கர சுவாமிகள் என்ற சாமியார் வீட்டில் சிலை தடுப்பு பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

நான்கு அடி ஐம்பொன் முருகர் சிலை வைத்துள்ளது தொடர்பாக தகவலின் பேரில் சிலை தடுப்பு பிரிவு டிஎஸ்பி சந்திரசேகர் தலைமையில் போலீசார் விசாரணை நடைபெற்றது.சுமார் மூன்று மணி நேரமாக சிலை தடுப்பு பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் பாஸ்கர சுவாமிகள் இவரே சிலையை தயாரிப்பதாக சிலை தடுப்பு போலீசாரிடம் தெரிவித்துள்ளார்..
சிலை தயாரிப்பது போன்ற வீடியோக்களையும் சிலை தடுப்பு அதிகாரிகளிடம் தயாரித்ததற்கு சான்றாக காண்பித்துள்ளார்.

இருப்பினும் சிலை தடுப்பு பிரிவு போலீசார் ஆவணங்கள் தொடர்பாக வேறு ஏதேனும் தொடர்புகள் உள்ளதா?என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

உரிய ஆவணங்கள் இன்றி சிலை வைத்துள்ளதால் சிலை தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சிலை சுமார் 200 கிலோ வரை இருக்கும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க