• Download mobile app
16 Nov 2025, SundayEdition - 3567
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஸ்போர்ட்ஸ் லேண்ட் சார்பாக நடைபெற்ற அத்லெட் ஹன்ட் ஜூனியர் அத்லெட்டிக் சாம்பியன்ஷிப் போட்டி

November 4, 2022 தண்டோரா குழு

கோவையில் ஸ்போர்ட்ஸ் லேண்ட் சார்பாக நடைபெற்ற அத்லெட் ஹன்ட் ஜூனியர் அத்லெட்டிக் சாம்பியன்ஷிப் போட்டியில் பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

கோவையில் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக விளையாட்டு தொடர்பான சாதனங்கள் விற்பனையில் ஸ்போர்ட்ஸ் லேண்ட் தனி முத்திரை பதித்து விளையாட்டு சாதனங்களை விற்பனை செய்து வருகின்றனர்.இந்நிலையில் பள்ளி மாணவ,மாணவிகளிடையே விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் விதமாக மாவட்ட அளவிலான அத்லெட் ஹன்ட் எனும் ஜூனியர் அத்லெட்டிக் சேம்பியன்ஷிப் போட்டிகளை ஸ்போர்ட்ஸ் லேண்ட் முதல் முறையாக கோவை நேரு ஸ்டேடிய அரங்கில் நடத்தியது.

ஸ்போர்ட்ஸ் லேண்ட் நிர்வாக இயக்குனர் நவீன் ஜோன் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இதன் துவக்க விழாவில் கோவை மாநகர போக்குவரத்து காவல் துறை துணை ஆணையர் அசோக் குமார் கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தார்.மாவட்ட விளையாட்டு அலுவலர் ரகு குமார் பள்ளி மாணவ, மாணவிகளின் அணி வகுப்பை கொடியசைத்து துவக்கி வைத்தார்.தொடர்ந்து மாவட்ட அளவில் சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ,மாணவிகள் விளையாட்டு போட்டிகளில் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

இதில் ஓட்டப்பந்தயம்,தொடர் ஓட்டம்,நீளம் மற்றும் உயரம் தாண்டுதல்,குண்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன…இதில் சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

மேலும் படிக்க