• Download mobile app
16 Nov 2025, SundayEdition - 3567
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஊழல் எதிர்ப்பு வாரத்தை முன்னிட்டு பொதுமக்களிடையே லஞ்சம் குறித்த விழிப்புணர்வு வாக்கத்தான்

November 3, 2022 தண்டோரா குழு

ஊழல் எதிர்ப்பு வாரத்தை முன்னிட்டு பொதுமக்களிடையே லஞ்சம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கோவையில் பேங்க் ஆப் இந்தியா சார்பாக வாக்கத்தான் நடைபெற்றது.

வளர்ச்சி அடைந்த நாடாக ஊழல் இல்லாத இந்தியா என்ற தலைப்பில் அக்டோபர் 31 முதல் நவம்பர் 6-ம் தேதி வரை ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில் பொதுமக்களிடையே லஞ்சம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பேங்க் ஆப் இந்தியா வங்கி சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

முன்னதாக பள்ளி மாணவர்களிடையே வளர்ந்த நாடாக உருவாக ஊழலற்ற இந்தியா எனும் தலைப்பில் பேச்சுப்போட்டி,கட்டுரை போட்டி நடைபெற்றது.இதனை தொடர்ந்து வங்கி ஊழியர்கள் சார்பாக மனித சங்கிலி மற்றும் வாக்கத்தான் நடைபெற்றது.

இதில் பேசிய பேங்க் ஆப் இந்தியா வங்கியின் கோவை மண்டல மேலாளர் அன்பு மணி,

பொதுமக்கள் ஒவ்வொரு அரசு தொடர்பான இடங்களிலும் லஞ்சம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும் எனவும்,குறிப்பாக அயல் நாடுகளை போல விதிகளை மதித்து நடந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.இது குறித்த விழிப்புணர்வை பள்ளியில் பயீலும் போதே மாணவர்களுக்கு ஏற்படுத்துவதால் வரும் தலைமுறை ஊழலற்ற இந்தியாவாக உருவாகும் என நம்பிக்கை தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் மண்டல துணை மேலாளர் முனுசாமி, கோவை கிளை வங்கியின் உதவி பொது மேலாளர் ராம்தாஸ், இண்டஸ்ட்ரியல் தொடர்பு துறை தலைமை மேலாளர் பிரவீணா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க