• Download mobile app
16 Nov 2025, SundayEdition - 3567
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தல்கா ஜமேஷாவிற்கு கார் விற்பனை மட்டுமே செய்துள்ளார் அவரை விடுவிக்க வேண்டும் – ஹைதர் அலி

November 3, 2022 தண்டோரா குழு

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள கார் விற்பனையாளர் தல்கா உள்ளிட்ட குற்றமற்றவர்களை விடுவிக்க வேண்டும் என ஐக்கிய முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் மாநில தலைவர் ஹைதர் அலி,கோரிக்கை விடுத்துள்ளார்.

கோவையில் அண்மையில் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே நடைபெற்ற கார் சிலிண்டர் வெடிவிபத்தில் தொடர்படையை சிலரை காவல்துறையினர் கைது செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ.அதிகாரிகள் தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ஐக்கிய முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் மாநில தலைவர் ஹைதர் அலி கோவை குணியமுத்தூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர்,

ஏற்கனவே என்.ஐ.ஏ.விசாரனை வளையத்தில் இருந்த ஜமேஷா முபீன் கோவை சிலிண்டர் வெடி விபத்தில் தொடர்பானது எப்படி என கேள்வி எழுப்பிய அவர்,இதில் பலவிதமான ஐயங்கள் ஏற்படுவதாக தெரிவித்தார். மேலும் இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள தல்கா ஜமேஷாவிற்கு கார் விற்பனை மட்டுமே செய்துள்ளதாகவும்,எனவே இந்த சம்பவத்தில் குற்றமற்றவர்களை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

என்.ஐ.ஏ.தொடர்பான விசாரனை நடைபெற்று வரும் நிலையில் பா.ஜ.க.மாநில தலைவரான அண்ணாமலைக்கு வெடி விபத்து தொடர்பான ஆவணங்கள் எப்படி கிடைத்து எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.வரும் 2024 ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் கோவை பாராளுமன்ற தொகுதியை எப்படியாவது கைப்பற்றி விட வேண்டும் என்ற போட்டி பா.ஜ.க.மாநில தலைவர் மற்றும் கோவை மாவட்ட நிர்வாகிகளிடம் இருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்த சந்திப்பின் போது அவருடன்,ஐக்கிய முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின்,மாநில பொருளாளர், ஹாலிதின், மாவட்ட பொறுப்பாளர்கள் ஆர் எம் ரபீக், பெரோஸ், மற்றும் நிர்வாகிகள் ஆசாத் நகர் பாஜித், சாகுல் முன்னா, மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க