• Download mobile app
16 Nov 2025, SundayEdition - 3567
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பாஜக-வை சேர்ந்த 257 பேர் மீது இரு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குபதிவு

November 2, 2022 தண்டோரா குழு

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பாஜக-வை சேர்ந்த 257 பேர் மீது இரு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

திமுக அரசை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி அண்ணாமலை உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.

இதனிடையே அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்து கோவை சித்தாபுதூர் சாலையில் பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமராமசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காட்டூர் போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

இந்நிலையில் அனுமதியின்றி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி பாஜக-வை சேர்ந்த 257 பேர் மீது IPC 143,மற்றும் 341 ஆகிய இரு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

மேலும் படிக்க