• Download mobile app
13 May 2025, TuesdayEdition - 3380
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாவட்ட வங்கிகளின் வருடாந்திர கடன் திட்ட புத்தகம் வெளியீடு – ரூ.27,700 கோடி கடன் வழங்க இலக்கு

October 30, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்ட வங்கிகளின் வருடாந்திர கடன் திட்ட புத்தகம் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில், ரூ.27 ஆயிரத்து 700 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 2022-23ம் ஆண்டிற்கான கோவை மாவட்ட வங்கிகளின் வருடாந்திர கடன் திட்ட புத்தகத்தை கலெக்டர் சமீரன் வெளியிட்டார். இப்புத்தகத்தின் முதல் பிரதியை கனரா வங்கி உதவி பொது மேலாளர்பாபு, ரிசர்வ் வங்கி உதவி பொது மேலாளர் அமிர்தவள்ளி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

இதுகுறித்து கலெக்டர் சமீரன் கூறுகையில்,

“ஒவ்வொரு ஆண்டும் நபார்டு வங்கி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வளம் சார்ந்த வங்கி கடன் திட்டத்தை தயாரித்து வெளியிடுகிறது. அதன் அடிப்படையில், தமிழகத்திலேயே மிகவும் அதிகபட்சமாக ரூ.27 ஆயிரத்து 700 கோடிக்கு கோவை மாவட்டத்தில் உள்ள வங்கிகளின் மூலம் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டிற்கான வருடாந்திர கடன் திட்டமானது நபார்டு வங்கியின் உத்தேச கடன் இலக்கை ஆதாரமாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. கடன் திட்டத்தில் விவசாயத்திற்கு ரூ.12 ஆயிரம் கோடியும், சிறு குறு நடுத்தர தொழில் மையத்திற்கு ரூ.14 ஆயிரத்து 500 கோடியும் இன்னும் பிற முன்னுரிமை கடன்களுக்கு ரூ.1200 கோடி என மொத்தம் ரூ.27 ஆயிரத்து 700 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.4987.25 கோடி அதிகம் என்பது குறிப்பிடதக்கது.

இவ்வாறு சமீரன் கூறினார்.

இதைத்தொடர்ந்து கனரா வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்று சுயதொழில் செய்து முன்னேறிய 4 மகளிருக்கு கலெக்டர் சமீரன் விருதுகளை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) சந்திரா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கவுசல்யா தேவி, தாட்கோ பொது மேலாளர் செல்வன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க