• Download mobile app
16 Nov 2025, SundayEdition - 3567
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தொழிற்சாலை உரிமத்தினை ஆன்லைன் மூலமாக மட்டுமே புதுபித்துக் கொள்ள வேண்டும்

October 27, 2022 தண்டோரா குழு

தொழிற்சாலைகள் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து தொழிற்சாலைகளும் 2023ம் ஆண்டுக்கான தொழிற்சாலை உரிமத்தினை ஆன்லைன் மூலமாக மட்டுமே புதுபித்துக் கொள்ள வேண்டும்.உரிமத்தை புதுப்பித்துக் கொள்ள வேண்டிய கடைசி நாள் வரும் 31ம் தேதி ஆகும்.

எனவே கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள் சட்டத்தின் கீழ் பதிவு பெற்ற தொழிற்சாலைகள் http://dish.tn.gov.in என்ற இணையதள முகவரிக்குள் சென்று உரிய உரிமத் தொகையினை ஆன்லைன் மூலம் செலுத்தி ஆன்லைன் விண்ணப்பத்தினை சமர்ப்பித்து புதுபிக்கப்பட்ட உரிமத்தினை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தகவலை கோவை தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம்-1 இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க