• Download mobile app
16 Nov 2025, SundayEdition - 3567
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தீபாவளியையொட்டி கோவையில் 1.8 டன் தங்க நகைகள் விற்பனை

October 27, 2022 தண்டோரா குழு

கோவையில் தங்க நகை தயாரிப்பு தொழிலில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நகைப்பட்டறைகள் செயல்பட்டு வருகின்றன. கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகைக்கு தங்க நகைகள் விற்பனை மந்தமாக காணப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு விற்பனை அதிகரித்துள்ளது.

இதுகுறித்து கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் கூறியதாவது:

கடந்த 2 ஆண்டுகள் மிகவும் மந்தமாக காணப்பட்ட விற்பனை இந்த ஆண்டு மிகவும் சிறப்பாக இருந்தது.கடந்த வாரம் வெள்ளிக்கிழமை துவங்கி ஞாயிற்றுகிழமை வரை 3 நாட்களில் மட்டும் சுமார் 1.8 டன் எடையிலான தங்க நகைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு சுமார் ரூ.752 கோடி ஆகும்.

விற்பனை செய்யப்பட்ட நகைகளில் மோதிரம், தோடு உள்ளிட்ட சிறிய வகை தங்க நகைகள் தான் அதிகம். இருப்பினும் இத்தகைய நகைகளை அதிக மக்கள் வாங்கியதால் விற்பனை மிக சிறப்பாக இருந்தது.
நகை விற்பனையை பொருத்தவரை தீபாவளி பண்டிகை முடிந்த பின்னரும் 10 நாட்கள் வரை தொடர்ந்து வியாபாரம் நன்றாக இருக்கும்.

தங்கம் இறக்குமதிக்கு 15 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.5 சதவீத வரியை குறைத்து 10 சதவீதமாக நடைமுறைபடுத்தினால் வணிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் மிகுந்த பயன் தரும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க