• Download mobile app
04 May 2024, SaturdayEdition - 3006
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தீபாவளியை முன்னிட்டு 3 நாட்கள் கடைகள் மூடப்பட வேண்டும் – வானதி சீனிவாசன் எம். எல். ஏ.!

October 21, 2022 தண்டோரா குழு

கோவை மக்கள் சேவை மையம் நடத்தும் மோடியின் மகள் திட்டத்தில் 5 வயது முதல் 12 வயது வரை உள்ள தந்தையை இழந்த பெண் குழந்தைகளுக்கு ரூபாய் 10 ஆயிரம் கல்வி ஊக்கத் தொகை வழங்கும் விழா கோவை வடகோவை பகுதியில் உள்ள குஜராத் சமாஜத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தலைமை வகித்தார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து வானதி சீனிவாசன் பேசுகையில்,
இந்த குழந்தைகள் தீபாவளியை சந்தோசமாக கொண்டாட ஏற்பாடு செய்துள்ளோம். கல்வி கற்ற குழந்தைகளுக்கும், திறமை படைத்த குழந்தைகளுக்கும் ஊக்கம் கொடுக்கும் வகையில் வருடம் முழுதும் அவர்களுடன் தொடர்பிலிருந்து அவர்களின் நலம் பேணி காக்க உள்ளோம். 90% சதவீதம் ஆண்கள் இறக்க மதுவே காரணம்.தமிழக அரசு தொடர்ந்து மதுக்கடைகளை திறந்து இளம் விதவைகளை அதிகரித்து வருகின்றனர்.

எனது தொகுதிக்குட்பட்ட தெற்கு தொகுதியில் கூட மார்க்கெட் பகுதியான ஒப்பணக்கார வீதி பகுதியில் கூட மதுக்கடையை திறக்கிறார்கள். இளம் விதவையை அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள்.தமிழக முதல்வரின் போதை ஒழிப்பு தீர்மானம் கண் துடைப்பு தான்.

மதுவால் 40 வயதுக்குள் இறந்த ஆண்கள் குடும்பத்தை, மதுக்கடையை நடத்தும் மாநில அரசு ஏற்று நடத்த வேண்டும். இதற்கு பாஜக குரல் கொடுக்கும்.தமிழக அரசு இதுபோன்ற குடும்பங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும். குறைந்தபட்சம் தீபாவளி அன்றைக்காவது குடும்பம் நிம்மதியாக இருக்க தீபாவளியை முன்னிட்டு 3 நாட்கள் கடைகள் மூடப்பட வேண்டும்.மது விற்பனைக்கு இலக்கை வைப்பது நல்ல அரசாங்கமாக இருக்க முடியாது என்றார்.

பின்னர் அரசியல் கேள்வியான இந்தி விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது என்றார்.மேலும்திமுக அமைச்சர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்கள் நடத்தும் பள்ளிகளில் இந்தி கற்றுக் கொடுக்கப்படுகிறது. அவர்களின் பிள்ளைகள் இந்தி கற்றுக் கொண்டு உள்ளார்கள்.ஆனால் யார் ஏமாற்றப்படுகிறார்கள் என்றால் அரசாங்க பள்ளியில் படிக்கும் ஏழை குழந்தைகள் தான். தமிழக அரசுக்கு இன்னொரு மொழியை கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற அக்கறை இல்லை.

தாய் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இதைத்தான் புதிய கல்விக் கொள்கை சொல்கிறது. மோடி மருத்துவக் கல்வி உட்பட தாய்மொழியில் கற்றுக் கொடுக்க வேண்டும் என்கிறார்.ஏன் முதல்வர் தாய்மொழியில் கற்றுக் கொடுக்க முயற்சி எடுக்கவில்லை என தெரிவித்தார்.

மேலும் படிக்க