கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:
கோவை மாநகராட்சி சார்பாக குப்பைகளை வீடு, வீடாக மக்களிடம் இருந்து வாங்க 100 சிறிய ரக எலெக்டரிக் வாகனங்கள் வாங்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. இந்த வாகனத்தில் 650 கிலோ வரை குப்பைகள் லோடு ஏற்று கொண்டு செல்லலாம். 100 வாகனத்தில் மக்கும் குப்பை, மக்கா குப்பை, இ வேஸ்ட் போன்றவைகளை பெற தனி தனி அடுக்குகள் பிரித்து வைக்கப்பட்டிருக்கும்.
அதற்கு ஏற்றார் போல் வடிவமைப்பு செய்யப்பட உள்ளன. மேலும், குப்பைகளை இந்த வாகனங்கள் நுண் உயிர் உரக்கூடங்களுக்கு எடுத்து செல்லும். கோவை மாநகராட்சியில் ரூ.8 கோடி மதிப்பில் அன்மையில் சாலை சீர் செய்யும் பணிகள் நடைபெற்று வந்தன. இதில் 80 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளன. மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளிலும் வார்டு சபை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சூயஸ் சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் 24 மணி நேரம் குடிநீர் திட்டத்தில் கடந்த மாதம் 50 கிலோ மீட்டர் வரை குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டு விடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதிகள் முழுவதும் 99 பிரிவுகளாக பிரித்து இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதில், தற்போது வரை 18 பிரிவுகள் நிறைவடைந்துள்ளன. டிசம்பர் மாதத்திற்குள் 22 பிரிவுகளின் பணிகள் நிறைவு பெற்றிருக்கும். கோவை வெள்ளலூர் குப்பைகிடங்கில் பயோ மைனிங் மூலம் தேங்கி உள்ள குப்பைகளை அழிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், சுமார் 20 ஏக்கர் வரை தேக்கி வைத்திருந்த குப்பைகள் அழிக்கப்பட்டுள்ளன.
இதில், 5 ஏக்கர் நிலத்தில் மியா வாக்கி எனவும் அடர் வனக்காடுகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. மாநகராட்சி கட்டண கழிப்பிடத்தில் பொதுமக்களிடம் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தொடர் புகார்களின் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டு புகார் உறுதிப்படுத்தப்பட்டால் கழிப்பிட ஒப்பந்தம் ரத்து செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு